உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டம் ஒழுங்கு சிறப்பாகத்தான் இருக்கிறது: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

சட்டம் ஒழுங்கு சிறப்பாகத்தான் இருக்கிறது: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சட்டம் ஒழுங்கு சிறப்பாகத்தான் இருக்கிறது. இதனால் தான் வெளி மாநிலங்களில் இருந்து தொழிற்சாலைகள் எல்லாம் முதலீடுகள் செய்கின்றன' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னை தி.ரு.வி.க., நகர் கன்னிகாபுரம் விளையாட்டு மைதான பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு சென்னைக்கு பல்வேறு பணிகளை செய்து இருக்கிறோம். வடசென்னை வளர்ந்த சென்னையாக இருக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஒராண்டு காலத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க அறிவுறுத்தி உள்ளேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0qqu34fo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒவ்வொரு விவகாரத்திலும் அரசுக்கு எதிராக தான் கவர்னர் செயல்படுகிறார். அது எங்களுக்கு நன்றாக தான் இருக்கிறது. இதனை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும். கவர்னரின் செயல்பாடுகள் அரசுக்கு சிறப்பு சேர்ப்பதால் அவர் அப்படியே செயல்பட வேண்டும். ஈ.வெ.ராவை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு மரியாதை கொடுக்க விரும்பவில்லை.வேண்டும் என்றே திட்டமிட்டு, சட்ட ஒழுங்கு பிரச்னை இருப்பதாக பெரிதுபடுத்துகிறார்கள். இதனை பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. எங்களை பொறுத்தவரைக்கும் சட்டம் ஒழுங்கு சிறப்பாக தான் இருக்கிறது. அதனால் தான் வெளிநாடுகளில் இருந்து, வெளி மாநிலங்களில் இருந்து தொழிற்சாலைகள் எல்லாம் முதலீடுகள் செய்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 91 )

Gopal
பிப் 07, 2025 09:57

நிலைமையை இன்னும் முதல்வர் புரிந்து கொள்ள வில்லை எனில் கூடி இருக்கும் மந்திரிகளின் ஜால்ரா சத்தம் மிக சாதகமாக உள்ளது என்று பொருள். விழித்து கொள்ளுங்கள் முதல்வரே உங்கள் கற்பனை உலகத்தில் உறங்காதீர்கள்.


VASUDEVAN
பிப் 06, 2025 17:11

இதை மக்கள் சொல்லவேண்டும் உங்கள் ஆட்சி லட்சணம் எல்லோருக்கும் தெரியும் வெறும் வெட்டி தம்பட்டம்


Sivasankaran Kannan
பிப் 04, 2025 22:38

இது திருட்டு மாடல் மட்டும் இல்ல.. குருட்டு மாடல், செவிட்டு மாடல்


S.V.Srinivasan
பிப் 03, 2025 07:48

இந்த உதார எத்தனை தடவை விடுவீங்க? தமிழக மக்கள் எல்லாரையும் முட்டாள்னு நினைச்சுட்டீங்களா. புத்திசாலிகளும் இருக்காங்க. முழு பூசணிக்காயை சோத்துல மறைக்க பாக்றீங்களே. இது உங்களுக்கே அசிங்கமா தெரியல.


madhes
பிப் 01, 2025 14:53

இந்தியாவிலேயே ஏன் உலகத்துலயே சட்டம் ஒழுங்கு நல்ல இருக்குற மாநிலமென்றால் அது பிஜேபி ஆட்சி செய்யும் உத்திரபிரதேசம் தான்,


Rajasekar Jayaraman
பிப் 01, 2025 05:59

அதை நீயோ உன் கூட்டனியோ சொல்லகூடாது பொது மக்களாகிய நாங்கள் சொல்ல வேண்டும்.


S.V.Srinivasan
பிப் 03, 2025 07:52

பொது மக்கள் யாரும் சொல்லமாட்டேங்கிறாங்க. அதனால்தான் இவரே தமுக்கு அடிச்சிக்கறாரு. கழுத்துல ஒரு தண்டோராவை தொங்க விட்டுடலாம்.


Laddoo
பிப் 01, 2025 04:13

என்னது எம்ஜிஆர் செத்துட்டாரா? அப்ப இந்திராவை கொலை பண்ணிட்டாங்களா?


Nandakumar Naidu.
பிப் 01, 2025 00:53

பூனை கண்களை மூடிக்கொண்டு பூலோகம் இருண்டு விட்டது என்றதாம். இவர்களெல்லாம் நம் தமிழகத்தின் சாபக்கேடு.


theruvasagan
ஜன 31, 2025 22:26

சட்டம் ஒழுங்கு சிறப்பா இருக்கறதாலதான் உயர்நீதி மன்றமே மனமகிழ்ந்து போய் அரசாங்க துறை செயலாளரை கூப்பிட்டு கூண்டுல நிக்க வைச்சு பாராட்டு பத்திரம் வாசித்ததை சொல்லலையே. இருந்தாலும் இம்புட்டு தன்னடக்கம் கூடாது.


subramanian
ஜன 31, 2025 22:01

நாட்டின் உண்மையான நிலையை அறியாத நாற்காலி பைத்தியம்.


புதிய வீடியோ