உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதி பரிபாலனத்தின் அடித்தளம் வழக்கறிஞர்கள் மணிப்பூர் தலைமை நீதிபதி சுந்தர் பெருமிதம்

நீதி பரிபாலனத்தின் அடித்தளம் வழக்கறிஞர்கள் மணிப்பூர் தலைமை நீதிபதி சுந்தர் பெருமிதம்

சென்னை:''வழக்கறிஞர்கள் தான் நீதிபதிகளாக பணியாற்றுகின்றனர். எனவே, நீதி பரிபாலனத்தின் அடித்தளமே வழக்கறிஞர்கள் தான்,'' என, மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.சுந்தர் தெரிவித்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பெறுப்பேற்றுள்ள எம்.சுந்தருக்கு, சென்னையில் நேற்று பாராட்டு வழா நடந்தது. விழாவில், அவர் பேசியதாவது: நீதிபதியாக தகுதி பெற, தனியே பாடத்திட்டம் எதுவும் இல்லை. வழக்கறிஞர்கள் தான் நீதிபதிகளாக பணியாற்றுகின்றனர். எனவே, நீதி பரிபாலனத்தின் அடித்தளமே வழக்கறிஞர்கள் தான். சென்னை உயர் நீதிமன்றத்தில், நான் நீதிபதியாக இருந்தபோது, சில வழக்குகளில் கடுமையாக நடந்து கொண்டிருக்கலாம். சில சமயங்களில் சிலரிடம் கடினமாக பேசியிருக்கலாம். அதை தனிப்பட்ட விமர்சனமாக எடுத்து கொள்ளாமல், நீதித்துறை அமைப்பின் மரியாதையாகவும், எனது உண்மையான அக்கறையாகவும், நீங்கள் கருத வேண்டும். சென்னை உயர் நீதிமன்றம் மிகச் சிறந்த பாரம்பரியம் கொண்டது. இங்கிருந்து எங்கே சென்றாலும் மதிப்பு பெறுவீர். உங்களின் ஒழுக்கம், சட்ட அறிவு மற்றும் உயர்ந்த நடைமுறைகள் வாயிலாக, மக்கள் உங்களை பாராட்டுவர். எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்ணியத்தையும், மரியாதையையும், எப்போதும் காக்க வேண்டும். இன்று இளம் வழக்கறிஞர்களாக இருப்போர், நாளை நீதிபதியாக மாறுவர். ஒவ்வொரு வழக்கறிஞரின் அலுவலகமும், ஒரு பயிலகமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D Natarajan
அக் 24, 2025 12:23

இந்தியாவில் நீதித்துறை அதல பாதாளத்தில் உள்ளதற்கு இந்த வக்கீல்கள் தான் காரணம். நீதிபதிகள் அதற்க்கு ஒத்துழைப்பு. உலகத்திலேயே மிக அதிகமாக பொய் சொல்லுபவர்கள் இந்த வக்கீல்கள். பணத்திற்காக எந்த வழக்கிலும் வாதிடுவார்கள். கபில் சிபல் போல .


m.arunachalam
அக் 24, 2025 10:33

மனசாட்சி உள்ள வழக்கறிஞர்கள் அடித்தளம்தான். ஆனால் எண்ணிக்கையில் குறைவு.


Ramesh Sargam
அக் 24, 2025 09:47

அதுவும் இந்திய சட்டங்களில் உள்ள ஓட்டைகளை நன்கு அறிந்து வாதிடும் வழக்கறிஞர்கள் நீதி பரிபாலனத்தின் அசைக்கமுடியாத, தகர்க்கமுடியாத உறுதியான அடித்தளம். அவர்கள் கண்ணெதிரில் ஒரு கொலையை பார்த்தாலும், அந்த கொலைசெய்தவர்களுக்கு, நமது சட்டத்தில் உள்ள ஓட்டைகளை நன்றாக பயன்படுத்தி அவர்கள் கொலையே செய்யவில்லை என்று வாதிட்டு அவர்களை தண்டனையிலிருந்து காப்பாற்றும் திறமை கொண்டவர்கள் இன்றைய வழக்கறிஞர்கள்.


முக்கிய வீடியோ