உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமலர் நாளிதழ் மீது சட்ட நடவடிக்கை: அரசு

தினமலர் நாளிதழ் மீது சட்ட நடவடிக்கை: அரசு

அரசின் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடப்பதை ஒட்டி, தமிழக கோவில்களில் சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடத்த தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலையத்துறை வாய் மொழியாக தடை விதித்துள்ளது என, 'தினமலர்' நாளிதழில் தவறான செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.கோவில் பணிகளை அனைவரும் போற்றும் வகையில் நிறைவேற்றி வரும் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் தீய நோக்கத்துடன், உண்மைக்கு மாறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, பொதுமக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி, அரசு மீது வெறுப்பை துாண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள 'தினமலர்' நாளிதழின் செயல் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.இந்நிலையில், தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், அப்பட்டமான வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் பொய் செய்தியை வெளியிட்டுள்ள செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இத்தகைய தவறான, உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட, 'தினமலர்' நாளிதழ் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை