உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மோட்டார் பம்ப் கட்டடத்தில் ஓய்வெடுக்கும் சிறுத்தைகள்

மோட்டார் பம்ப் கட்டடத்தில் ஓய்வெடுக்கும் சிறுத்தைகள்

குன்னூர் : குன்னூர் பந்துமை - கம்பிச்சோலை சாலையோர குடிநீர் மோட்டார் பம்ப் அறை கட்டடம் மீது, இரு சிறுத்தைகள் அமர்ந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.நீலகிரி மாவட்டம் குன்னூர் கம்பிச்சோலை சுற்றுப்புற பகுதிகளில், இரவு நேரங்களில் சமீப காலமாக சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதை மக்கள் பார்த்து வனத்துறைக்கு தெரிவித்துள்ளனர்.அவ்வப்போது, ஆய்வு மேற்கொள்ளும் வனத்துறையினரும், இரவு நேரத்தில், மக்களுக்கு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். என, அறிவுறுத்தினர். இந்நிலையில், நேற்று காலை கம்பிச்சோலை - பந்துமை சாலையோரத்தில், பேரட்டி ஊராட்சி மோட்டார் பம்ப் கட்டடத்தின் மீது அமர்ந்து இருந்த இரு சிறுத்தைகளை அவ்வழியாக சென்றவர்கள் போட்டோ எடுத்துள்ளனர். அதற்குள் அந்த சிறுத்தைகள் குதித்து ஓடியுள்ளது.இந்த போட்டோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. வனத்துறையினர் கூறுகையில், ''கண்காணிக்கப்பட்டு வருகிறது. மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொடர்ந்து நடமாட்டம் இருப்பது தெரியவந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நிக்கோல்தாம்சன்
ஜூலை 13, 2025 13:21

அதுக்கும் வீடு வாசல் வேணுமாம் , நம்ம காங்கிரஸ் நாயகன் அதற்க்கு வீடு கட்டி கொடுப்பாரா ? பெங்களுருவில் வீதி நாய்களுக்கு கறி சோறு போடுவது போல


Benson MJ
ஜூலை 13, 2025 08:11

Good மோர்னிங்