உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாட்டாகுடியை நேரில் அண்ணாமலை பார்க்கட்டும்  

நாட்டாகுடியை நேரில் அண்ணாமலை பார்க்கட்டும்  

யாருக்கும் தெரியாமல் இருந்த சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டாகுடி கிராமம் இன்று உலகம் முழுதும் தெரிந்து விட்டது. சில ஆண்டுக்கு முன், கணேசன் என்பவர் கொல்லப்பட்டார். ஜூலை 20ல் சோணைமுத்து 62, என்பவர் கொல்லப்பட்டார். இந்த கிராமத்தில் இருந்து வேலை, குழந்தை களின் கல்விக்காக, நகரங்களுக்கு மக்கள் குடி பெயர்ந்துள்ளனர். கொலைகளால் ஏற்பட்ட அச்ச உணர்வால் கூட இடம் பெயர்ந்திருக்கலாம்; நான் மறுக்கவில்லை. ஆனால், நாட்டாகுடியில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என சொல்ல முடியாது. குடிநீர் மேல்நிலை தொட்டி; 5,000 லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளன. 'ஜல் ஜீவன்' திட்டம் வாயிலாக மத்திய அரசு, ரூ.4,835 கோடி ஒதுக்கியும், கிராமங்களுக்கு குடிநீர் திட்டம் சேரவில்லை என கூறும் தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, சந்தேகம் இருந்தால் நாட்டாகுடிக்கு நேரில் வந்து பார்க்கட்டும். - பெரியகருப்பன் தமிழக அமைச்சர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ