உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீட் விவகாரத்தை பழனிசாமி சட்டசபையில் பேசட்டும்

நீட் விவகாரத்தை பழனிசாமி சட்டசபையில் பேசட்டும்

வேலுார் : “நீட் தேர்வு விவகாரம் குறித்து தைரியமிருந்தால், பழனிசாமி சட்டசபையில் பேசட்டும்,” என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார்.வேலுார் மாவட்டம் சேவூரில், 6.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில், காங்கேயநல்லுார் - அம்முண்டி வரை கால்வாயை துார்வாரும் பணி நிறைவு பெற்று, பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அமைச்சர் துரைமுருகன் கால்வாயை திறந்து வைத்து பேசுகையில், “தமிழகத்தில் தொழிலாளர் பிரச்னை இல்லாவிட்டாலும், எட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் தமிழகத்தில் மூடியே கிடக்கின்றன. ஆனால், காட்பாடி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மட்டும், என் திறமையால் இயக்கச் செய்துள்ளேன்,” என்றார். பின், அவர் அளித்த பேட்டி: கர்நாடகா அரசு, மேகதாது அணைக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க மத்திய அரசிடம் பணம் செலுத்தியது. அதனாலேயே, அதை தயாரித்து வழங்கியுள்ளனர். அதனால், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் கிடையாது.மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், மத்திய அரசின் நான்கு கமிட்டிகள், கர்நாடக அரசு கோரிக்கையை ஏற்காமல், திருப்பி அனுப்பி விட்டன. சுற்றுச்சூழல் துறை, மத்திய நீர்வளத்துறை அனுமதி வழங்கவில்லை. தமிழகத்தின் ஒத்துழைப்பு இன்றி, ஒருநாளும் கர்நாடக அரசால் மேகதாது அணை கட்டவே முடியாது. முல்லை பெரியாறு பிரச்னை குறித்து முழுதுமாக எதுவும் தெரியாமல், எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி பேசி வருகிறார். முல்லை பெரியாறு அணை தொடர்பாக, வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அப்படி இருக்கும்போது, கேரள அரசை கண்டித்து, தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்கிறார் பழனிசாமி. தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக இப்படி பேசுகிறாராம். நல்ல வேடிக்கை. தைரியம் இருந்தால், நீட் விவகாரம் குறித்து, தமிழக சட்டசபையில் அ.தி.மு.க.,வின் பழனிசாமி பேச வேண்டும். பேசினால், அவருடைய தைரியத்தை பாராட்டலாம். இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

S.L.Narasimman
ஏப் 21, 2025 13:53

எடப்பாடியார் எதற்கு பேசவேண்டும். நீட்டை ஒழிக்க ரகசியம் இருக்குன்னு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த கும்பல் நீங்கதான் மாணவர்க்கு பதில் சொல்லனும்.


Suppan
ஏப் 21, 2025 12:49

நீட் ஓழிப்பு என்பது எப்பொழுதோ செத்துவிட்டது. தேர்தலுக்காக அவ்வப்பொழுது எழுப்பப்படும் கூப்பாடு.


oviya vijay
ஏப் 21, 2025 06:49

ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் விலக்கு அப்டின்னு பொய் சொல்லி வந்தீர்கள். இப்போ அடுத்த தேர்தல்ல வந்தாச்சா. தைரியம் இருந்தல் இதை பற்றி சட்ட சபையில் பேசுங்கள்...இருக்கா?


சமீபத்திய செய்தி