ஆணைய விசாரணை அறிக்கை வெளிவரட்டும்
கரூரில் நடிகர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்துக்கு வந்திருந்தோரில், 41 பேர், நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி உயிர் இழந்திருப்பது கொடூரம். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கூடவே, நடந்தது என்ன என்பதை தெளிவாக அறிவதற்காக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, கமிஷனும் விசாரணையை துவங்கி உள்ளது. முறையான விசாரணைக்குப் பின், விசாரணை அறிக்கையை அரசிடம் ஆணையம் சமர்ப்பிக்கும். அதில் என்னவெல்லாம் சொல்லப்படும் என்பதையெல்லாம் பார்த்த பின்தான், நடந்த சம்பவம் குறித்து கருத்து சொல்ல முடியும். மேற்கொண்டு, இப்பிரச்னை குறித்து பேசி, யாரையும் புண்படுத்தக் கூடாது. இலவம் பஞ்சு உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில், ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசுவேன். - பன்னீர்செல்வம் முன்னாள் முதல்வர்