உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 20 பெண்களை சீரழித்த தி.மு.க., நிர்வாகி: இ.பி.எஸ்., காட்டம்!

20 பெண்களை சீரழித்த தி.மு.க., நிர்வாகி: இ.பி.எஸ்., காட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:''தி.மு.க. குற்றவாளிகள் அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சிக்கும் 'சார்'கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wi9kulw3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரது அறிக்கை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவன் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக 'சார்'களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த வழக்கில் எப்.ஐ.ஆர்., பதிய அலைக்கழித்த தமிழக அரசின் காவல்துறை, அரக்கோணம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ரவியிடம் மாணவி முறையிட்ட பிறகே எப்.ஐ.ஆர்., பதிந்துள்ளது.

அலங்கோல ஆட்சி

மேலும், தன்னைப் போன்றே '20 வயதுள்ள 20 பெண்கள்' தெய்வச்செயலின் கொடூரப் பிடியில் சிக்கியுள்ளதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார். 'பொள்ளாச்சி பொள்ளாச்சி' என்று மேடைதோறும் கூவிய முதல்வரே, 'உங்கள் அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி' தானே? பொள்ளாச்சி வழக்கிற்கும் இந்த வழக்கிற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? பொள்ளாச்சி வழக்கை நான் நேர்மையாக சி.பி.ஐ.,க்கு மாற்றினேன்.நீங்களோ, அரக்கோணம் வழக்கை நீர்த்துப் போக எல்லா வேலைகளையும் செய்துகொண்டு இருக்கிறீர்கள். பாதிக்கப்பட்ட பெண் தெளிவாக 'உங்கள் நண்பர் பெற்றெடுத்த பிள்ளை' அமைச்சர் மகேஷ் உள்ளிட்ட தி.மு.க.,வினர் பெயரைச் சொல்லி, தான் மிரட்டப்படுவதாக சொல்கிறார்.

'டம்மி அப்பா'

தி.மு.க. குற்றவாளிகள் அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சிக்கும் 'சார்'கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும். 20 வயது பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தத் துடிக்கும் தி.மு.க., நிர்வாகி(கள்) மீது இந்த 'டம்மி அப்பா' அரசு நடவடிக்கை எடுக்குமா? எடுக்காவிடில், மக்கள் துணையோடு நிச்சயம் அ.தி.மு.க., மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

RAMESH
மே 20, 2025 12:23

மாதர் சங்கம்...திருமா... வைகோ.... வேல்முருகன்..... கம்யூனிஸ்ட் கட்சிகள் வேடிக்கை பார்கிறது....


என்றும் இந்தியன்
மே 19, 2025 17:08

திருடர்கள் முரடர்கள் கயவர்கள் என்று தன்னை ருசு செய்து கொள்கின்றது திமுக


Sudha
மே 19, 2025 13:55

தெரிந்த சார் பெயர்களை தெரியவைப்பார்


Nallavan
மே 19, 2025 13:51

போச்சோ சட்டம் பத்தாது, ... சட்டம் கொண்டுவரவேண்டும் -


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 19, 2025 12:17

காமக் கொடூரர்கள் நிறைந்த கூடாரமே திமுக. பேரன் பேத்தி கண்ட மந்திரியே மைக் போட்டு ஆபாசமாக பேசுகிறான். அவன் வழியில் வந்த தொண்டர்கள் எப்படி இருப்பார்கள். திராவிட கட்சிகள் ஆட்சி நீடித்தால் மாணவிகள் மானமுடன் கல்வி பயில முடியாத நிலை கண்டிப்பாக வரும். திராவிட கட்சிகளை ஒழிப்பது ஒன்றே இதற்கு தீர்வாகும்.


Barakat Ali
மே 19, 2025 11:44

அந்த செய்திவாசிப்பாளர் என்ன சொல்கிறார் ????


Svs Yaadum oore
மே 19, 2025 11:38

திருமணம் ஆகாமல் பிறந்த குழந்தையை வீட்டு வாசலில் புதைத்த கல்லூரி மாணவி.. தகவலை மறைத்ததாக மாணவியின் காதலன் கைது... குழந்தையின் அழுகுரல் கேட்டு அந்த வழியே சென்ற வேறு பெண் குழந்தையை மீட்டுள்ளார் .. தினம் தினம் இப்படி செய்தி நாடு சீரழியுது.. அரசு பள்ளி ஆசிரியர் போஸ்கொ சட்டத்தில் கைது செய்யப்படுவது தொடர்கதை.. போதை கஞ்சா மெத்து கள்ள சாராயம் பாலியல் குற்றம்.. இதில் படித்து முன்னேறிய மாநிலமாம் ...கார்பொரேட் சாராய கம்பெனி நடத்துபவனை காசு வாங்கி வோட்டு போட்டு மந்திரிகளாக பதவி கொடுத்தால் இப்படித்தான் நாடு சீரழியும் ...இப்படி ஒரு அசிங்கமான , படு ஆபாச கேவலமான ஆட்சியை நாடு கண்டிராது .....


sridhar
மே 19, 2025 16:55

இதுங்களுக்கு வோட்டு போட்ட மக்களுக்கு பாதி பாவம் போய் சேரும், சேறணும் .