உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பேன்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பேன்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ‛‛ வரும் 27ம் தேதி டில்லியில் நடக்கும் நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பேன்'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.மத்திய பட்ஜெட் தொடர்பாக சென்னையில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டி: மத்திய பட்ஜெட்டை ஒட்டி முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளேன். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 3வது முறையாக ஓட்டு போட்ட மக்களுக்கு பாஜ., கூட்டணி அரசு எந்த நன்மையும் செய்ய தயாராக இல்லை என்பதை பட்ஜெட் காட்டுகிறது.

சந்தேகம்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என என்னென்ன திட்டங்கள் அறிவிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு இருந்தேன். ஆனால் அது எதையும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. பா.ஜ.,விற்கு ஆதரவு அளித்த சில மாநில கட்சிகளை திருப்திபடுத்தும் வகையில் சில திட்டங்கள் அறிவித்துள்ளனர். அதையும் நிறைவேற்றுவார்களா என சந்தேகம் தான். தமிழகத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் என அறிவித்துவிட்டு, நிதி ஒதுக்காமல் இன்று வரை ஏமாற்றி கொண்டுள்ளனரோ அதேபோன்று அந்த மாநிலங்களுக்கும் எதிர்காலத்தில் நடக்காது என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.

கேள்வி

தமிழகம் இரண்டு பேரிடர்களை சந்தித்துள்ளது. ரூ.37 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்டோம். இதுவரை ரூ.276 கோடி தான் கொடுத்துள்ளனர். அது சட்டப்படி வரவேண்டிய தொகை தான். பேரிடர் பாதிப்புகளை மத்திய பாதுகாப்பு அமைச்சர், நிதி அமைச்சர் பார்வையிட்டு சென்றனர். இப்படித் தான் தமிழக மக்களை பா.ஜ., மதிக்கிறதா என்பது எனது கேள்வி

இல்லை

தமிழகத்திற்கான சிறப்பு திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை. நமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. புதிய ரயில்வே திட்டங்களை அறிவிக்கவில்லை. பா.ஜ.,வை தாங்கி பிடிக்கும் மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களை நிதியமைச்சர் மறந்துவிட்டார்.தமிழகம் என்ற சொல்லே பட்ஜெட்டில் இல்லை. பட்ஜெட்டில் இல்லை என்பதை சொல்வதை விட, மத்திய பா.ஜ.,வின் செயல்பாடு, சிந்தனைகளில் தமிழகம் இல்லை. பாரபட்சமும் ஏமாற்றமும் தான் அறிக்கையில் உள்ளது. நாட்டின் பட்ஜெட் என்பது அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இந்த நிதி நிலை அறிக்கையில் நீதி இல்லை. அநீதி தான் உள்ளது.

போராடுவோம்

வரும் 27 ம் தேதி நிடி ஆயோக் கூட்டம் நடைபெற இருந்தது. அதில் பங்கேற்க திட்டமிட்டு தயாராகி கொண்டு இருந்தேன். பட்ஜெட்டில் தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் அந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என முடிவு எடுத்துள்ளேன். புறக்கணிக்க போகிறேன். தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசின் கூட்டத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது தான் சரி. தமிழகத்தின் உரிமைகள், தேவைகளை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் போராடுவோம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 93 )

கத்தரிக்காய் வியாபாரி
ஆக 22, 2024 21:12

போனா மானக்கேடு. கொவுரமா இப்படி சொல்லிட்டு இருந்துக்க வேண்டியதுதான்.


TSRSethu
ஆக 19, 2024 23:53

ஆம் அங்கே விவாதம் செய்ய வேண்டி சூழல் இருக்கும். புள்ளி விபரங்களை சரியான நேரத்தில் பேச வேண்டும். வாசித்தல் அங்கே பயன்தராது


Vivekanandan Mahalingam
ஆக 16, 2024 10:53

போனாலும் ஒன்னும் புரியாது - உள்ள போறச்சே வெளியால வரச்சே ஊடகம் வேற மைக் நீட்டும் - ஹிந்தில கேட்ட ஹிந்தி தெரியாதுன்னு சொல்லலாம் - ஆனா இப்போ தமிழ்ல கேக்க ஆரம்பிச்சாச்சு - ஒளியறத வேற வழி இல்லை


Mariadoss E
ஆக 01, 2024 19:30

விவரமான, ஹிந்தி தெரிந்த சங்கிகள் இருந்தால் சென்று அல்லது சொல்லி மத்திய அரசிடம் நிதி வாங்கித் தங்கள் எனது அடுத்த ஓட்டு பிஜேபி க்கு தான்.....


Narayanan
ஜூலை 31, 2024 15:35

முதல்வராக பதவி ஏற்ற நாள் முதலாகவே நிதி ஆயோக் கூட்டத்திற்கு போகவே இல்லை . இப்போ என்ன ? நமக்குத்தான் எழுதி கொடுக்கும் தமிழைப்படிக்கவே திணறல் . அங்கே உடனடியாக பேசமுடியாது .தமிழோ , ஆங்கிலமோ , ஹிந்தியோ தெரியாது . சும்மா கூத்தடிக்கிறார்


பச்சை தமிழன்
ஜூலை 30, 2024 16:02

எங்கள் மன்னர் எந்த முடிவு எடுத்தாலும் அது மிகவும் சரியாகத்தான் இருக்கும்...ஏன் என்றால் அங்கு சென்றால் எல்லாரும் ஹிந்தி, இங்கிலீஷ் லேயே பேசி கொள்வார்கள்...நமக்குதான் தமிழை தவிர வேறு எதுவும் தெரியாதே ...அதனால் போய் அசிங்கப்படாமல் இருப்பதே நல்லது ....வாழ்க எங்கள் மன்னர்


xyzabc
ஜூலை 29, 2024 09:09

கணக்கு கேட்டலே கோபம் . Ministers, MPs சுருட்டிய பணம் திரும்பி வந்தால் tn will be in a better place


kumarkv
ஜூலை 26, 2024 14:28

பாகிஸ்தானில் ஒரு பிட்டிங் இருக்கு போறியா


Amsi Ramesh
ஜூலை 25, 2024 15:30

மத்திய அரசின் எல்லா திட்டங்களும் மொத்த இந்தியாவிற்கும் தான், அதில் தமிழகத்திற்கும் சேர்த்து தான் பட்ஜெட் கொடுக்கப்பட்டுள்ளது. ஏதோ தமிழகம் தனி பிரதேசம் போல இந்திய அரசு கருதுகிறது மாதிரி தமிழக மாநில அரசு மிகை படுத்தி மக்களை திசை திருப்புகின்றனர். தமிழ்நாட்டின் 40 MPக்கள் தங்கள் தொகுதி பற்றி பேசாமல் தங்கள் தலைவர்களை துதி பாடுவதாக இருக்கின்றனர்.


Saravana Doreswamy
ஜூலை 27, 2024 10:59

worst CM Worst TN Elected MPS.


Indian
ஜூலை 25, 2024 15:27

சரியான முடிவு ..நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதால் எந்த பயனும் இல்லைஇல்லை


மேலும் செய்திகள்









புதிய வீடியோ