உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழில் பேசுவேன்: கன்னியாகுமரியில் அமித்ஷா உறுதி

தமிழில் பேசுவேன்: கன்னியாகுமரியில் அமித்ஷா உறுதி

நாகர்கோவில்: தமிழ் மொழியில் உங்கள் முன் பேச முடியவில்லை என வருத்தமாக உள்ளது. ஆனால், 3 ஆண்டுக்குள் இதே இடத்தில் தமிழில் பேசுவேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.கன்னியாகுமரி தொகுதி பா.ஜ., வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் நந்தினி ஆகியோரை ஆதரித்து தக்கலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ‛ ரோடு ஷோ' நடத்தினார்.இதில் அமித்ஷா பேசியதாவது: தமிழ் மொழி, கலாசாரம், பாரம்பரியத்தை பாதுகாக்க பிரதமர் மோடி ஓய்வின்றி உழைத்து வருகிறார். அனைவரையும் ஒருங்கிணைத்து தமிழகத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த பா.ஜ., விரும்புகிறது. ஆனால், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் ஊழலில் ஈடுபட்டு மாநிலத்தின் வளர்ச்சியை கெடுத்து விட்டனர். 3வது முறை மோடி பிரதமர் ஆனால், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா 3வது இடத்தை பிடிக்கும். 400க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ., வெற்றி பெறும் என அனைவரும் பேசுகின்றனர். நாட்டை பாதுகாப்பாகவும், முன்னர் இல்லாத அளவு வளர்ச்சியடைந்ததாகவும் மோடி வைத்துள்ளார். சனாதானத்தை இழிவுபடுத்தி மக்களின் உணர்வுகளை திமுக காயப்படுத்தி விட்டது. ஆனால், பா.ஜ., அனைவரையும் மதிக்கிறது. தமிழ் மொழியில் உங்கள் முன் பேச முடியவில்லை என வருத்தமாக உள்ளது. ஆனால், 3 ஆண்டுக்குள் இதே இடத்தில் தமிழில் பேசுவேன். இவ்வாறு அமித்ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Azar Mufeen
ஏப் 14, 2024 03:53

பூ உங்க முன்னாடி தானே இருக்கிறது எங்கள் காதில் சுற்றுவதற்கு


J.Isaac
ஏப் 13, 2024 18:25

உபி, பீஹார், மபி வளர்ச்சி அடைய செய்யுங்கள்


வெற்றிசெல்வன்
ஏப் 13, 2024 17:44

ஐயா, நீங்ககூட தமிழ் கற்று நன்றாக பேசுவீர்கள். ஆனால் தமிழகத்திலேயே பிறந்த சில தற்குறிகறள், தமிழை தமிழ் அப்படீன்னுதான் உச்சரிக்கிறார்கள். இவங்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.


swaminathan
ஏப் 13, 2024 16:53

இத்தனை நாள் தூங்கிக் கொண்டிருந்தீர்கள? இல்லை நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தோம் என்று நினைத்தீர்களா?


Ramasamy Selvaraj
ஏப் 13, 2024 15:53

கடந்த பத்து வருடம் தூங்கிக்கொண்டு இருதேர்களா


தமிழ்நாட்டுபற்றாளன்
ஏப் 13, 2024 14:20

நீங்கள் எங்களை உயர்த்துவது இருக்கட்டும் , முதலில் நீங்கள் ஆளும் மாநிலங்கள் எந்த வகையில் TN விட உயர்ந்து இருக்கு ஒரு மாநிலம் சொல்லுங்க


Indian
ஏப் 13, 2024 13:34

வருசமா செய்யலியே தேர்தல் வந்ததால் மட்டும் சொல்றீங்க


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி