உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பறவைகளுக்கு உணவு கொடையளிப்போம்; படம் வெளியிட்டு முதல்வர் வேண்டுகோள்

பறவைகளுக்கு உணவு கொடையளிப்போம்; படம் வெளியிட்டு முதல்வர் வேண்டுகோள்

சென்னை: ''கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடை அளிப்போம்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால், பகல் நேரங்களில் வெளியில் செல்வதை பலரும் தவிர்த்து வருகின்றனர். உடல் வெப்பத்தை தணிக்க தர்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர், நுங்கு பயன்படுத்த துவங்கி உள்ளனர்.அதேநேரத்தில் பறவைகளும் கோடை வெயிலால் அவதி அடைகின்றனர். இந்நிலையில், பறவைகளுக்கு உணவு அளிக்கும் படத்தை சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளனர். ''கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடை அளிப்போம்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

V GOPALAN
மார் 31, 2025 21:05

மத்திய அரசு கொடுக்கும் ரேஷன் அரிசி பெரூம்பாலும் பறவைகளுக்கு உணவாக நமது முதல்வரும் கொடுக்கிறார்


Bhakt
மார் 31, 2025 14:28

நல்ல விஷயம் நைனா. இது போட்டோஷூட்டுக்காக இல்லையே?


N Srinivasan
மார் 31, 2025 13:56

இதில கூட மோடியை பார்த்து ஸ்டிக்கர் ஓட்ட வேண்டுமா? மோடி செஞ்சால் அதற்கு பெயர் போட்டோ சுட. நீங்க பண்ணா என்ன அப்பா


GNANA RAJ
மார் 31, 2025 13:47

மொதல்ல பட்டினியால் வாடும் மக்களுக்கு சோறு போடுங்க


rama adhavan
மார் 31, 2025 12:39

மகளிர் மாத உதவி திட்டம் போல் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் ஏதாவது மாத உதவி திட்டம் கொண்டு வரலாம். பறவை, விலங்கு வளர்ப்போர் ஓட்டையும் அள்ளலாம்.


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 31, 2025 13:52

சும்மாவே இருக்கமாட்டீங்களா? பறவை, விலங்கு வளர்ப்போர் ஓட்டு என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டியது, அப்புறம் பறவைகளும் விலங்குகளுமே ஓட்டு போட்டு என்னை ஜெயிக்க வச்சதுன்னு சொல்லி அப்பா ஜெயிச்சுடுவாரு தேர்தல் கமிஷனும் ஆமாம் ஆமாம் என்று தலையாட்டும்


முக்கிய வீடியோ