உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தெரிந்து கொள்வோமா திருச்செந்துாரை...

தெரிந்து கொள்வோமா திருச்செந்துாரை...

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

* இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பே இருந்தது திருச்செந்துார். அதை இரண்டாம் படைவீடு என அழைக்கிறோம்.* முருகனின் அவதார நோக்கமான சூரசம்ஹாரம் நிறைவேறிய ஊர் திருச்செந்துார். * அறுபடை கோயில்களில் பெரியது திருச்செந்துார். * திருச்செந்துாரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு நோக்கியும், சண்முகர் தெற்கு நோக்கியும் உள்ளனர்.* காவல் தெய்வமாக வீரபாகு உள்ளதால் இத்தலத்துக்கு வீரவாகு பட்டினம் என பெயருண்டு. வீரபாகுவுக்கு பூஜை நடந்த பிறகே மூலவருக்கு பூஜை நடக்கிறது.* பாலசுப்பிரமணியருக்கு வெள்ளை நிற ஆடையும், சண்முகருக்கு பச்சை நிற ஆடையும் அணிவிக்கின்றனர். * மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் முருகன் வழிபட்ட பஞ்ச லிங்கங்களை தரிசிக்கலாம். இந்த அறையின் பெயர் 'பாம்பறை'. * கோயிலின் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் குழந்தை பாக்கியத்திற்காக தொட்டில் கட்டுகின்றனர்.* சண்முகர், ஜெயந்தி நாதர், குமர விடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்ஸவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை 'மாப்பிள்ளை சுவாமி' என்பர். * ராஜ கோபுரம் 17ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகள் கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.* திருச்செந்துார் மீது அருணகிரிநாதர் 83 திருப்புகழ் பாடல்கள் பாடினார். இதை பாடினால் கந்தலோகத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும். * திருச்செந்துார் கோயிலின் அமைப்பு பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் உள்ளது.* சண்முக விலாசம் என்னும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. இதனை 124 துாண்கள் தாங்குகின்றன.* 24 அடி ஆழம் கொண்ட நாழிக்கிணறில் நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும். * மவுனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி மூவரும் திருச்செந்துார் கோயில் திருப்பணிக்காக தங்களின் வாழ்நாளை அர்ப்பணித்தனர். இவர்களின் சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது.* மன்னார் வளைகுடாவின் கரை ஓரத்தில் அலைகள் தழுவ அமைந்திருப்பதால் 'அலைவாய்' எனப்பட்டது. * கோயிலுக்குச் செல்லும் வழியில் துாண்டுகை விநாயகர் இருக்கிறார். இவரை வணங்கிய பின் முருகனை வணங்க வேண்டும்.* மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை வேல் பிளவுபடுத்திய இடம் திருச்செந்துாரில் இருந்து 3 கி.மீ., துாரத்தில் உள்ள 'மாப்பாடு'(மாமரத்தை பிளந்ததால்). அது தற்போது மணப்பாடாகி மாறியது. * மூடிய ராஜகோபுரம் சூரசம்ஹாரம் முடிந்த, மறுநாளில் நடக்கும் தெய்வானை திருமணத்தின் போது திறக்கப்படும்.* அதிகாலையில் நடக்கும் விஸ்வரூப தரிசனத்தை (நிர்மால்ய பூஜை) பார்ப்பது விசேஷம். * கால அடிப்படையில் ஆதிசங்கரர், அருணகிரிநாதர், குமரகுருபரர், பகழிக் கூத்தர், உக்கிரபாண்டியனின் மகள் உள்பட பல அடியார்கள் திருச்செந்துாரானின் அருள் பெற்றவர்கள். * செந்திலாண்டவருக்கு ஆறுமுக நயினார் என பெயருண்டு. * வீரபாண்டிய கட்ட பொம்மனும் அவர் மனைவி ஜக்கம்மாவும் தங்க நகைகளை முருகப்பெருமானுக்கு காணிக்கை அளித்தனர். * திருச்செந்துாரில் உச்சிக்கால பூஜை முடிந்து மணி ஒலித்த பிறகே வீரபாண்டிய கட்டபொம்மன் மதிய உணவு சாப்பிடுவார். அதற்காக 100 கிலோ எடை கொண்ட மணியை ஒலிக்கச் செய்தார். ராஜகோபுரம் 9ம் அறையில் இது உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Rathna
அக் 27, 2025 11:20

ஆதிசங்கரர் 2000 வருடங்களுக்கு முன்னால் வழிபட்ட தலம். சுமார் 10000 வருடங்களுக்கு முன்னால் இருந்து, மக்கள் வழிபாட்டில் உள்ள தலம். பாம்பு ஒன்று முருகனை வழிபாடும் வகையை பார்த்து, ஆதிசங்கரர், சுப்ரமணிய புஜங்கம் என்ற திருப்பதிகத்தை அங்கே பாடி அவர் கண்ணில் ஒளி பெற்றார். சூரபதுமனை வென்ற பின்னர், முருக பெருமான் மாயன் என்னும் விஸ்வகர்ம மூலம் ஜெகநாத லிங்கம் என்ற சிவன் சிலையை நிறுவி அங்கே வழிபாடு செய்த கோவில் திருச்செந்தூர். டச்சுக்காரர்கள் 1648ல் முருகன் கோவில் சிலையை கடத்தி கப்பலில் கொண்டு சென்றனர். கடலில் கொண்டு செல்லும் போது மிக பெரிய புயல் வீசி கப்பல் கவிழ இருந்தது. மாலுமிகள் கப்பலில் இருக்கும் முருகன் சிலையே அதற்கு காரணம் என்று முருகனின் சண்முகர் சிலையை கடலில் வீசினர். உயிர் தப்பித்தார்கள் . முருகன் சிலை இல்லாததை கண்டு நாயக்க மன்னர்கள் சிலை செய்ய முயற்சிக்கும் பொது, முருகன் தாம் இருக்கும் இடத்தை காண்பிக்க கருடன் வடிவத்தில் வந்து கடலில் சரியான இடத்தை காண்பிக்க அந்த சிலை கடலில் இருந்து கண்டறியப்பட்டு அதே இடத்தில நிறுவப்பட்டது.


MP.K
அக் 27, 2025 10:10

சாதாரணமான மக்களும் எளிதில் முருகனை காண நடவடிக்கை எடுக்க வேண்டும்


Sriniv
அக் 27, 2025 08:19

செந்தில் ஆண்டவா உன் திருவடி சரணம் குருவை வருவாய் அருள்வாய் குகனே வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா


pakalavan
அக் 27, 2025 07:25

வீரபான்டிய கட்ட பொம்மன், திருச்செந்தூரிலிருந்து பாலையங்கோட்டை வரையிலும் சுமார் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் உயரமான பரன் அமைத்து வைத்திருந்தார், திருச்செந்தூர் முருகருக்கு அபிசேகம் நெய்வேத்யம் நடந்த பிறகு வரிசையாக மணி ஒலிக்கும், அதன் பிறகே மன்னர் உணவு அருந்துவார்


Ramesh Sargam
அக் 27, 2025 06:54

விவரங்களுக்கு மிக்க நன்றி முருகா. முருகனுக்கு அரோஹரா.


Srinivasan Narasimhan
அக் 27, 2025 06:20

மருகா போறீறி கந்தா போற்றி