உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றுவோம்: அன்புமணி

தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றுவோம்: அன்புமணி

சித்திரை நிலவு மாநாட்டில் பா.ம.க., தலைவர் அன்புமணி பேசியதாவது:

அருந்ததியர்களுக்கு 3; முஸ்லிம்களுக்கு 3.5; வன்னியர்களுக்கு 13.1 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க, ஜனார்த்தனன் கமிஷன் பரிந்துரை செய்தது. அப்போதைய முதல்வர் கருணாநிதி, அருந்ததியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் உள் ஒதுக்கீடு வழங்கினார். வன்னியர்களுக்கு வழங்கவில்லை. அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கி, அவர்களை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக, 45 ஆண்டு காலமாக ராமதாஸ் உழைக்கிறார்.மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தில், ஒதுக்கப்பட்ட 20 சதவீதத்தில் வன்னியருக்கு 10 அல்லது 12 சதவீதம் ஒதுக்கீடு செய்வதாக கூறுகின்றனர். ஆனால், வன்னியர்களுக்கு உரிய இடம் கிடைப்பதில்லை. தமிழக காவல் துறையில், டி.ஜி.பி., - ஏ.டி.ஜி.பி., ஐ.ஜி., போன்ற உயர் அதிகாரிகள் பொறுப்பில், 109 பேர் உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் வன்னியர். இது சமூக அநீதி.பின்தங்கியுள்ள வன்னியர் சமுதாயத்தை முன்னேற்ற, முதல்வர் ஸ்டாலினிடம் எந்த ஒரு திட்டமிடலும் இல்லை. அதைபற்றி அவருக்கு கவலையும் இல்லை. நான் வன்னியர் சமுதாயத்தினருக்கு மட்டும் குரல் கொடுக்கவில்லை. பின்தங்கியுள்ள அனைத்து சமுதாயத்தினருக்கும் குரல் கொடுக்கிறேன். வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து பின் தங்கிய சமுதாயத்தினருக்கும், இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். நம் முக்கிய கோரிக்கை, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதை செய்வதாக, மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி. இது ராமதாசுக்கு கிடைத்த வெற்றி.தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஸ்டாலின் முன் வரமாட்டார். ஆனால், கணக்கெடுக்க வைக்க நாம் போராடுவோம். இவ்வளவு காலமாக கோரிக்கைகளை நிறைவேற்ற, நாம் மனு கொடுத்தோம். இனி மனு வாங்குகிற சமுதாயமாக மாற வேண்டும். அதற்கான காலத்தை உருவாக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலினுக்கு எல்லா அதிகாரமும் உள்ளது. ஆனால், மனசு இல்லை. நாட்டின் வளர்ச்சி, அடுக்குமாடி கட்டடங்கள், உள்கட்டமைப்பு வசதி மட்டுமல்ல; கல்வி அறிவு கொடுக்க வேண்டும். வேலைக்கு செல்ல வேண்டும்; அது தான் வளர்ச்சி. நான் முதல்வராக இருந்திருந்தால், எந்த சமுதாயத்தினர், எந்த நிலையில் இருக்கின்றனர் என்ற கணக்கெடுப்பை நடத்த முதல் கையெழுத்தை போட்டிருப்பேன்.சென்னைக்கும், கன்னியாகுமரிக்கும், 10 வழி சாலை போடுவேன். விவசாயிகள் நிலத்தை தந்தால், திட்டத்தில் பங்குதாரராக சேர்ப்பேன். மாதாமாதம் பணம் வங்கி வாயிலாக வந்து சேரும். இப்படி பல திட்டங்கள் எங்களிடம் உள்ளன.அதிகாரத்தை தாருங்கள். தமிழகத்தை சிங்கப்பூருக்கு நிகராக மாற்ற முடியும். தமிழகத்தில் உள்ள பிரச்னைகளை சொல்ல முடியும்; தீர்வும் காண முடியும். சமூக நீதியை நிலைநாட்ட வாய்ப்பு தாருங்கள்.வரும் காலம் நம் காலம். யார் பின்னாலும் செல்லாதீர்கள். என் பின்னால் வாருங்கள். உங்களுக்காக வாழ்கிறேன். தமிழகத்தை நாம் ஆள வேண்டிய காலம் வந்து விட்டது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

skv srinivasankrishnaveni
மே 13, 2025 12:20

ஹாஹாஹாஹாஹ ஹிஹிஹிஹி சிங்கப்பூரில் தெருவிலே எச்சில் துப்பினால் தண்டனை. லஞ்சம் தரணும் நம்ம நாட்டுலே ஆனால் அங்கே அதெல்லாம் நடக்காதுய்யா மக்களும் கட்டுப்படுறாங்க என்பது உண்மையே நம்ம ஊர்காரன் அங்கே போனால் கம்னு இருக்கான் சென்னைவந்ததுமே தன் சுய ஒழுக்கம் வுட்டுடுவான் இது 100% உண்மை. சிங்கப்பூரா மாற்றுவேன்னு சுத்தம் சுகாதாரம் பிறவிலேயே வரனும்


அப்பாவி
மே 13, 2025 01:31

முதல்ல பிரம்படி திட்டம் கொண்டாந்து பொய்யான வாக்குறுதிகள் அடிச்சி உடறவங்களை பின்பக்கம் கவனிக்கணும்.


sethusubramaniam
மே 12, 2025 21:57

மனு வாங்கறவங்களா யாரு வேணுமுன்னாலும் மாறலாம். நடவடிக்கை எடுக்கறவங்களா மாற றதுதான் கஷ்டம். ராமதாசும், அன்புமணியும் இலவுகாத்த கிளிகளாத்தான் இருக்க முடியும். போடறது தீர்மானம். படறது அவமானம் தான் இவங்க நிலை


Bhaskaran
மே 12, 2025 20:18

பெட்டி மட்டுமே குறிக்கோள் எதுக்கு வீண் பேச்சு


vbs manian
மே 12, 2025 18:02

ஏற்கனவே பலர் தமிழகத்தை நியூயார்க் லண்டன் ஜப்பான் ஆக மாற்றி விட்டார்கள். சும்மா அடிச்சு விடுங்க.


V K
மே 12, 2025 17:59

அப்போ பக்கத்து மாநிலம் ஆந்திர மலேஷியா ஆகிவிடும் மேங்கோ


Sundaran
மே 12, 2025 15:51

மேல உள்ள செயதியின்படி மாநாடு முடிந்து கடற்கரை சாலை இருபுறமும் டன் கணக்கில் குப்பை குவிந்துள்ளது என்று இருக்கு இவர் சிங்கப்பூராக மாற்ற போகிறாராம் . மாநாடு நடத்துபவர்களிடம் குப்பையை அகற்றுவதற்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டும்


Sudhakar NJ
மே 12, 2025 15:45

தமிழக மக்கள் அனைவரும் தமிழகத்தில் வாழத்தான் விரும்புகிறார்கள். ஆகவே, தமிழகத்தை முதலில் தமிழகமாக மாற்றுங்கள். அதன்பிறகு சிங்கப்பூராக மாற்றுவதற்கு யோசிக்கலாம்.


Madras Madra
மே 12, 2025 15:31

30 ஆண்டுகளாக திராவிட ன்ஸ் இப்படி சொல்லிக்கிட்டு இருந்தாங்க இப்ப இவுரு ஆரம்பிச்சிட்டாரு


Sridhar
மே 12, 2025 15:29

ஐஞ்சு சதவிகித வோட்டு வாங்க வக்கு இல்லாத ஆளுக பேசுற பேச்சப்பாரு. ஏன்யா இன்னும் ஜாதிரீதியாவே மக்களை பாத்து வோட்டு வாங்கணும்னு நினைக்கறீங்க? எந்த ஜாதியா வேணா இருந்துட்டு போகுது. முன்னேறமுடியாம கஷ்டப்பட்டுட்டு இருக்கற மனுசங்களையெல்லாம் முன்னுக்கு கொண்டுவர பாடுபடுவேன்னு சொல்லுங்கய்யா. இந்த லச்சணத்துல சிங்கப்பூரா மாத்துவாராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை