உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதை இல்லா தமிழகம் உருவாக்க ஒன்றிணைவோம்; முதல்வர் அழைப்பு!

போதை இல்லா தமிழகம் உருவாக்க ஒன்றிணைவோம்; முதல்வர் அழைப்பு!

சென்னை: 'போதை இல்லா தமிழகத்தை உருவாக்கிட ஒன்றிணைவோம்' என முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.சமூகவலைதளத்தில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள் சமுதாயத்திற்கு, உங்கள் சமூகத்தை சேர்ந்த ஒருவனாக, உங்கள் தந்தையாக ஒரு உருக்கமான வேண்டுகோள். போதையின் பாதையில் யாரும் போக கூடாது என்று மன்றாடி கேட்கிறேன். போதை ஒழியட்டும் பாதை ஒளிரட்டும். போதை இல்லா தமிழகத்தை உருவாக்கிட ஒன்றிணைவோம். தமிழகத்தை போதையில்லா மாநிலமாக உருவாக்குவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

அப்பாவி
அக் 25, 2024 01:29

டாஸ்மாக் சரக்கில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் கலந்து குடுக்கலாம். இப்பவே எவ்வளவு அடிச்சாலும் போதை ஏற மாட்டேங்குதாம்.


அப்பாவி
அக் 25, 2024 01:27

சிலர் கண்ணுலேயே போதை தெரியுதும்பாங்க.


HoneyBee
அக் 24, 2024 22:01

இவரை யாராவது தூக்கத்தில் இருந்து எழுப்புங்கபா. நிறைய உளறுராறு


Sundaran
அக் 24, 2024 21:41

ஊரு பூரா சாராய கடையை திறந்து வைத்து விட்டு போதை இல்லாத சமுதாயத்தை உருவாக்க போகிறாராம் .உபிஸ்கள் இதுக்கும் கை தட்டுவார்கள்


Vijay D Ratnam
அக் 24, 2024 21:37

கருணாநிதி மவன் போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க போறாராம். கேக்குறவன் கேனப்பயன்னா டாஸ்மாக்ல நெய் வடியுதும்பாய்ங்க. தலீவரே, எங்களையெல்லாம் பாத்தா ஒங்களுக்கு எப்டி தெரியுது. எதோ ஒட்டு போட்டு உங்கள முதலமைச்சர் ஆக்கிட்டோங்கிறதால இளிச்சவாயனுங்கன்னு எங்க நெத்தியில எழுதி ஒட்டியிருக்கா. பத்து வருசமா அதிமுகவை உட்கார வச்சோம்னு மாத்தி உங்கள உட்கார வச்சிருக்கோம் அம்புட்டுதேன். அடிச்ச காத்துல கோபுரத்துக்கு வந்திருக்கீங்க. இன்னும் ஒன்றரை வருஷம் கழிச்சி காத்து அடிக்கும்ல.


M Ramachandran
அக் 24, 2024 20:56

கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் இப்படி பேச நீங்கள் மூதல்வர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கோம் என்ற எண்ணம் வர வில்லையா? பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவதே நீங்கள் தான்


GANESAN VELUSAMY
அக் 24, 2024 20:55

வரவேற்கிறோம்.அதற்குரிய நடவடிக்கைகள் தெடங்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம்


Sudha
அக் 24, 2024 20:08

மூச்சு அடைச்சு நின்னுட்டாபோல


Sudha
அக் 24, 2024 20:04

அது கூட மைய அரசு தான் செய்யணும். ஆகவே அறிக்கை விட்டதும் வேலை முடிந்து விட்டது. ஜகுபருக்கு ஜாமீன் கிடைத்தால் ஒரு அறிக்கை பாக்கி


சி சொர்ணரதி
அக் 24, 2024 19:19

டாஸ்மாக் மூடிவிட வேண்டியது தானே.கெஞ்சல் எல்லாம் வேண்டாம். அரசு சாராயம் விற்க மாட்டோம் என்று முடிவு செய்வது, உங்கள் கைகளில் உள்ள போது ஏன் இந்த நாடகம்?


சமீபத்திய செய்தி