மேலும் செய்திகள்
தே.ஜ., கூட்டணி தொகுதி பங்கீடு ஆலோசனை துவக்கம்
2 hour(s) ago | 1
திமுகவால் தமிழகத்துக்கு என்ன கிடைத்தது ? இபிஎஸ் கேள்வி
5 hour(s) ago | 11
திருப்பரங்குன்றம் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்
8 hour(s) ago | 26
சென்னை:தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாலத்தீவு பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதனால், தென் மாவட்டங்களில், இன்றும், நாளையும் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில், இரவு மற்றும் அதிகாலையில், பனிமூட்டம் காணப்படும். குளிரான சூழல் நிலவும். பகலில் வறண்ட வானிலை நிலவும். நீலகிரி மாவட்டத்தில், ஓரிரு இடங்களில் இரவில், உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.சென்னையில் வானம் மேகமூட்டமாகவும், அதிகாலை மற்றும் இரவில் லேசான பனிமூட்டமாகவும் இருக்கும். அதிகபட்சம், 31 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2 hour(s) ago | 1
5 hour(s) ago | 11
8 hour(s) ago | 26