உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேங்காய் உடைப்பதில் மீண்டும் ஒரு சாதனை

தேங்காய் உடைப்பதில் மீண்டும் ஒரு சாதனை

புவனேஸ்வர்: தேங்காயை உடைப்பதில் தன்னுடைய சாதனையை தானே முறியடித்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த கேசாப் ஸ்வாயின். 39 வயதாகும் இவர்8.56 நிமிடத்தில் சுமார் 250 தேங்காய்களை உரித்து தன்னுடைய முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.ஒரு நிமிடத்தில் 72 தேங்காய்களை உடைத்து கின்னஸ் சாதனை படைப்பதே தனது லட்சியம் என குறிப்பிட்டுள்ளார். கடந்த 2007ம் ஆண்டு 7.16 நிமிடத்தில் 144 தேங்காய்களை உடைத்தெறிந்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். தொடர்ந்து கடந்த ஆண்டு 6.6 நிமிடத்தில் 184 காய்களை உடைத்தெறிந்து முந்தைய சாதனையை முறியடித்தார். தற்போது 8.56 நிமிடத்தில் 250 காய்களை உடைத்தெறிந்துள்ளார்.இது குறித்து கருத்து தெரிவித்த லிம்கா புத்தகத்தின் மார்க்கெட்டிங் பிரிவு அதிகாரி வி.வி.ஆர்.மூர்த்தி குறிப்பிடுகையில் ஐந்தாண்டுகளில் இந்த பிரிவில் இது போன்ற சாதனையை யாரும் நிகழ்த்தவில்லை என்று குறிப்பிட்டார். கேசாப்பின் சாதனைக்கு புவனேஸ்வர் நகரின் மாநில கலாச்சாரத்துறை மற்றம் ரோட்டரி சங்கம் ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ