உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காந்தி மண்டபத்தில் மது பாட்டில்கள்: கவர்னர் வருத்தம்

காந்தி மண்டபத்தில் மது பாட்டில்கள்: கவர்னர் வருத்தம்

சென்னை:''காந்தி மண்டப வளாகத்தில், மது பாட்டில்கள் கிடந்தது வருத்தம் அளிக்கிறது,'' என, கவர்னர் ரவி தெரிவித்தார்.துாய்மை சேவை திட்டத்தின் கீழ், சென்னை காந்தி மண்டபத்தில், நேற்று கவர்னர் ரவி துாய்மை பணியில் ஈடுபட்டார். தமிழகம் முழுதும் இருந்து, நுாற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் பங்கேற்றனர். அங்கிருந்த காந்தி சிலையை சுத்தம் செய்ததுடன், வளாகத்தில் இருந்த குப்பையையும் கவர்னர் அகற்றினார்.பின், அவர் அளித்த பேட்டி:சுதந்திரத்திற்கு பாடுபட்ட காந்தி, துாய்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். துாய்மையை தெய்வீகம் என்றார். நம் நாட்டில் பொது இடங்களில், குப்பையை கொட்டும் பழக்கம் உள்ளது. இது, நாகரிகமான சமுதாயத்திற்கு நல்லதல்ல. துாய்மை இல்லாததால், நோய்கள் பரவி, பாதிக்கப்படுவது ஏழை மக்கள் தான். துாய்மை இயக்கம் என்பது ஒரு நாள் பணி அல்ல. பல்கலைகள் உட்பட கல்வி நிறுவனங்களில், மாதம் ஒரு முறையாவது துாய்மை இயக்கத்தை நடத்த வேண்டும். அனைவரும் தங்கள் வாழ்க்கையில் துாய்மையை பராமரிக்க வேண்டும். பொது இடங்களை துாய்மையாக வைத்திருப்பது, ஒவ்வொருவரின் கடமை. காந்தி மண்டப வளாகத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, சில மது பாட்டில்களையும் பார்த்தேன். இது காந்தியின் கொள்கைகளுக்கு எதிரானது. இந்த செயல் வருத்தம் அளிக்கிறது.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !