உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊட்டி நகராட்சி கமிஷனருக்கு லஞ்சம் கொடுத்தவர்கள் பட்டியல்!

ஊட்டி நகராட்சி கமிஷனருக்கு லஞ்சம் கொடுத்தவர்கள் பட்டியல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஊட்டி: ஊட்டி நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷாவிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் ரூ.11.70 லட்சம் லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது; அந்த பணம், யார் யாரிடம் வசூலிக்கப்பட்டது என்ற விவரம் வெளியாகியுள்ளது.நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா பணி காலத்தில் கட்டட புனரமைப்பு பணிக்கு அனுமதி, வளர்ச்சி பணிகளில் அதிக கமிஷன் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 10ம் தேதி ஜஹாங்கீர் பாஷாவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காரில் பின்தொடர்ந்து சென்று கண்காணித்தனர்.அன்று மாலை ஜஹாங்கீர் பாஷா, அலுவலகம் முடிந்து அரசு காரில் கமிஷனர் 7:00 மணிக்கு வீட்டிற்கு சென்றார். பிறகு அங்கிருந்து ETIOS காரில் கமர்ஷியல் சாலையில் உள்ள சையதீ என்ற உணவகத்திற்கு சென்றார். அங்கு கேஷ் கவுன்டரில் இருந்தவர் கொடுத்த இரண்டு கவர்களை வாங்கி தனது பையில் வைத்துக் கொண்டார்.அங்கு வெளியே வந்த அவரிடம், டூவிலரில் வந்த ஒருவர் பச்சை நிற கவரை கொடுத்தார். அதனையும் ஜஹாங்கீர் பாஷா வாங்கி வைத்து கொண்டார். பிறகு கோத்தகிரி சாலையில், மேல்கோடப்பமந்து தாண்டி டீக்கடை முன் நின்றிருந்த ஒருவரிடம் காக்கி நிற கவரையும் ஜஹாங்கீர் வாங்கி வைத்துக் கொண்டார்.ஜஹாங்கீர் பாஷா சென்ற காரை தொட்டபெட்டா சந்திப்பிற்கு முன்பு வழிமறித்து நிறுத்தி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதில், பைகளில் உள்ள கவர்களில் பணம் இருப்பதை ஜஹாங்கீர் பாஷா ஒப்புக் கொண்டார். காரை நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கவர்களை மேஜையில் எடுத்து வைத்தனர்.அதில், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் குடியிருப்பு பயன்பாட்டில் இருந்து வணிக பயன்பாட்டுக்கு வரி இனத்தை மாற்றிக் கொடுத்தமைக்கு, உரிமையாளர்கள் கொடுத்த லஞ்சப்பணம் 2 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் இருந்தது. பச்சை கவரில் ரூ.2 லட்சம் இருந்தது. இது, தீபாவளிக்கு முன்பு சேரிங் கிராஸ் முதல் கேசினோ சந்திப்பு வரை பார்க்கிங் டென்டர் விடப்பட்டதும், டெண்டரை எடுத்த ரவிபிரசாத் என்பவர் கொடுத்த லஞ்சப்பணம் என தெரியவந்ததால் அதனையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.அதே பையில், காக்கி கவரில் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் ரூ.2.50 லட்சம் இருந்தது. இந்த பணம், ஊட்டி கமர்ஷியல் சாலையில், பாரதியார் வணிக வளாகம் கடை எண் 1 மற்றும் 2ல் பாபு சுலைமான் பெயரில் உள்ள லிம்ரா கார்மென்ட்ஸ் துணிக்கடையை ஹோட்டலாக மாற்றுவதற்காக சாகுல் ஹமீது என்கிற சிராஜ் கொடுத்த லஞ்சப்பணம் என்பது தெரியவந்தது.அவர் வைத்திருந்த சாம்பல் நிற துணிப்பையில் 4.71 லட்சம் ரூபாய் இருந்தது. அந்தப்பணம், குன்னூர் சாலையில் உள்ள சுவாதி டிரேடர்ஸ் கட்டடத்தின் பரப்பை குறைத்து சொத்து வரி விதித்ததற்காக தரப்பட்ட லஞ்சப்பணம் என்பது தெரியவந்தது.இப்படி மொத்தப்பணம், 11.70 லட்சம் ரூபாய் ஜஹாங்கீர் பாஷாவிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.வாகன டிரைவர் ராஜா கவுடாவிடம் விசாரித்த போது, ஜஹாங்கீர் பாஷா லஞ்சம் வாங்கியதையும், யார் யாரிடமும் பெற்றார் என்பதையும் உறுதி செய்தார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Karuthu kirukkan
நவ 13, 2024 05:55

இவர் அம்பு மட்டும் தான் எய்தவர் எங்கே? இது என்ன பிரமாதம், இந்த ஆட்சியில் இத விட bulka தட்டி தூக்கலாம் ஆனா கேஸ் நிக்காது, இது போன்ற செயல்களுக்கு கட்டிங் வட்டம், மாவட்டம், MLA, அமைச்சர் எப்போதும் ஆதரவு உண்டு. கண்கலங்கி கவலை வேண்டாம்


sundararajan
நவ 13, 2024 04:54

நல்ல வசூல். டீம்கா வசூல் குழுவில் சேர்ந்துட்டா இவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.


Ravi Kumar
நவ 12, 2024 21:44

Any how very glad about DVAC team, good keep it up. all the best in future endeavors.


நிக்கோல்தாம்சன்
நவ 12, 2024 21:18

கவுடா உன்னை இனி விடமாட்டான் ஜஹாங்கிர் மற்றும் அவனது கூட்டாளிகள்


Chandra
நவ 12, 2024 20:49

ரோட்டில் நின்று லஞ்சம் மிரட்டி வாங்கும் அரசு ஊழியர்கள் = வழிப்பறி கொள்ளையர்கள். ஆஃபிஸில் அமர்ந்து பிளாக் மெயில் செய்த்து லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் = ரவுடி தாத்தாக்கள். இந்த வழிப்பறி கொள்ளையர்களையும், ரவுடி தாத்தாக்களையும் நீக்கினால் மட்டுமே எந்த அரசாங்கமும் ஓடும். அவர்களின் ஆதார் கார்டு மற்றும் அனைத்து அடையாள அட்டைகளையும் கேன்சல் பண்ணுங்கள். ஏனெனில் இவர்களின் பிணத்தை அடக்கம் அல்லது எரிக்க கூட ஆதார் தேவை.


sundaran manogaran
நவ 12, 2024 20:30

ஏன் கைது செய்யப்படவில்லை... காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.


GMM
நவ 12, 2024 20:15

லஞ்ச ஒழிப்பு நடவடிக்கையில் முக்கிய மாற்றம் ஆரம்பம். லஞ்சம் கொடுத்த நபர்கள் விவரம் வெளிவந்துள்ளது. ஊழலின் முக்கிய திருப்பம். குடியிருப்பு, வணிக பயன்பாடு - துணி கடையை ஓட்டலாக மாற்ற லஞ்சம் போன்றவற்றிக்கு ஆணையர் மட்டும் அதிகாரம் செலுத்த முடியாது. regional director of municipal administration - ஒப்புதல் தேவை.? அரசியல் தொடர்ப்பு இருக்கும். வெளியிடவில்லை. ஆணையர் சற்றும் தயக்கம் இன்றி ஒப்புக்கொண்டது ஆச்சரியம். ஆனால் உண்மை. ஒரு நகராட்சியில் சில மணியில் இவ்வளவு லஞ்சம் என்றால், திராவிட ஆட்சியில் மாநிலம் முழுவதும் எத்தனை லட்சம் கோடி இருக்கும்?


murugaiyan
நவ 12, 2024 20:09

கேஸ் ஒன்றும் நிக்காது . ஒரு plot வாங்க பணம் தேவைப்பட்டது friends கடன் கேட்டேன் கொடுத்தார்கள் என்பார் . that is all


Sekar Times
நவ 12, 2024 20:04

லஞ்சம் கொடுத்தவர்களையும் உடனே கைது செய்து சட்டப்படி தண்டனை வாங்கித் தரவேண்டும்.அப்போதுதான் லஞ்சம் தந்து காரியம் சாதிக்கும் பலருக்கும் பயம் ஏற்படும். லஞ்சம் ஒழிப்பு என்பதும் முழுமையடையும்


Anantharaman Srinivasan
நவ 12, 2024 19:30

ஓரே இரவில் இரண்டு மூன்று மணி நேரத்தில் 11.70 லட்சத்தை லஞ்சமாக பெறுபவர் தன் சர்வீசில் எத்தனை கோடிகளை அள்ளி எடுப்பார்.


சமீபத்திய செய்தி