உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயங்கரவாத தாக்குதல்: மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை குழு ஆலோசனை

பயங்கரவாத தாக்குதல்: மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை குழு ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, நேற்று, டில்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில், உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது, ''எங்கு, எப்போது, எந்த இலக்கை தாக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய, ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது,'' என, பிரதமர் மோடி தெரிவித்தார்.இந்நிலையில் இன்று (ஏப்ரல் 30) டில்லியில் பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அமைச்சரவை குழு உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். ராணுவ ரீதியான நடவடிக்கை குறித்து, அமைச்சரவை குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Imran Hyderabad
ஏப் 30, 2025 16:48

பல தேச துரோகிகள் இங்கேய இருக்கிறார்கள்.


sirappalli suresh
ஏப் 30, 2025 13:35

ஒண்ணும் நடக்காது


Apposthalan samlin
ஏப் 30, 2025 12:35

எப்படா தாக்க போறீங்க buildup பயங்கரமா இருக்கு ஆனால் இதனை நாட்கள் கடந்தும் ஒன்னும் இல்லையே


N Sasikumar Yadhav
ஏப் 30, 2025 13:29

பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவு உள்நாட்டு ஓநாய்களை முதல்ல அழிக்கனும்


Ramesh Sargam
ஏப் 30, 2025 12:35

இன்னும் என்ன ஆலோசனை வேண்டிக்கிடக்கு. தாக்குதல் நடத்துங்கப்பா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை