உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லாக்கப் மரண வழக்கு; போலீசார் 9 பேருக்கு ஆயுள்!

லாக்கப் மரண வழக்கு; போலீசார் 9 பேருக்கு ஆயுள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலீஸ் ஸ்டேசனில் விசாரணை கைதி மரணமடைந்த வழக்கில், டி.எஸ்.பி., உள்ளிட்ட 9 போலீசாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.தூத்துக்குடியில் கடந்த 1999ம் ஆண்டு வெடிகுண்டு வழக்கு தொடர்பாக, வின்சென்ட் என்பவரை தாளமுத்து நகர் போலீசார் கைது செய்தனர். விசாரணை கைதியாக போலீஸ் ஸ்டேசனில் இருந்த நிலையில் அதே ஆண்டு செப்., 18 ல் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.25 ஆண்டுகளுக்கு பிறகு 2024 ஜூன் மாதம் தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிமன்றம் எண் 1ல் இந்த வழக்கு விசாரணைக்குஎடுத்துக் கொள்ளப்பட்டது. 13 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது, 38 ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.இன்று தீர்ப்பு வழங்கிய தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் எண் 1 நீதிபதி தாண்டவன், குற்றம்சாட்டப்பட்ட 11 போலீசாரில் பேரில் இரண்டு பேரை விடுவித்தார். மற்ற 9 போலீசாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். தண்டனை பெற்ற ராமகிருஷ்ணன் என்பவர் தற்போது ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி., ஆக உள்ளார். மற்றொருவர் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். மற்றவர்கள் ஓய்வு பெற்று விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
ஏப் 06, 2025 13:30

சாத்தான்குளம் நிகழ்வுக்கு கூக்குரல் எழுப்பிய திமுக இந்த தீர்ப்பு பற்றிப் பேசாது. அவங்க ஆட்சியில்தான் நடந்தது. தீர்ப்பை ஆதரித்தாலும் எதிர்த்தாலும் வாக்கு வங்கிக்கு சேதம்.


theruvasagan
ஏப் 06, 2025 10:16

வழக்கு பதிவானது 1999. வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது வருடம் 2024. அடேங்கப்பா. நீதித்துறை இவ்வளவு ஸ்பீடா இயங்குதா. ஓவர்ஸ்பீடு உடம்புக்காகாது நீதிமான்களே.


Perumal Pillai
ஏப் 05, 2025 22:28

They will be acquitted by the Supreme Court if the High Court fails to do so. Have seen thousands of accused individuals set free by the higher or apex court on the flimsy ground of lack of evidence. Yashwant Varma is not an individual but a well known organized shoddy tem.


Padmasridharan
ஏப் 05, 2025 19:27

Justice Delayed is Juatice Denied. என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அந்த 9 பேரின் புகைப்படங்கள் கிடைக்கவில்லையா. இதே ஒரு சாதாரண குற்றவாளியாக இருந்தால்.. இதனால்தான் encounter என்கிற பேரில் வெளியில சுட்டுக் கொள்கிறார்களா. . கர்மாவின் ஆட்டம் தொடரட்டும்


Anand
ஏப் 05, 2025 19:24

1999 ஆம் ஆண்டு நடந்த சம்பவம், இவ்வளவு சீக்கிரமாக தீர்ப்பு.......


KALIDASAN
ஏப் 05, 2025 19:02

"இந்த சம்பவம் ஒரு கொலை தான் என்ன விசாரணை நடக்குறதுனு சொல்லிட்டு, சட்டத்தை நம்பி கைதானவங்க உயிரே போயிருச்சு. இது போலீசா? நம்பிக்கையா? 25 வருஷம் கழிச்சு ஆயுள் தண்டனை குடுத்திருக்காங்கன்னா என்ன? அந்த 25 வருஷம் யாருடைய பொறுப்பு? அந்த குடும்பம் எப்படி வாழ்ந்தது? நாம டிஎஸ்பி-ன்னு பயப்படுறவங்கதான் கொலைகாரரா? இன்னும் வேலை பார்த்துக்கிட்டே இருக்குறதுக்கு அரசு வெட்கப்பட வேண்டாமா? சஸ்பெண்ட் பண்ணலேன்னா இதெல்லாம் நீதியோ, அரசியலோ இரண்டுக்கும் அவமானம்"


KALIDASAN
ஏப் 05, 2025 19:00

"25 வருடங்கள் கழித்து ஆனாலும் நீதி கிடைத்ததே மகிழ்ச்சி ஒரு சாதாரண மனிதன் போலீசாரால் இழந்த உயிருக்கு இவ்வளவு காலம் கழித்து நீதிமன்றம் அழுத்தமான தீர்ப்பு வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாதவாறு காவல்துறையில் உரிய கட்டுப்பாடுகள் மற்றும் reform தேவை. நீதிக்கு நேரம் ஆகலாம், ஆனாலும் அது வருமென்பதில் நம்பிக்கை கொடுக்கிறது இந்த தீர்ப்பு."


சமீபத்திய செய்தி