உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லாக்கப் டெத்: டி.எஸ்.பி., உட்பட9 போலீசாருக்கு ஆயுள் சிறை 25 ஆண்டுகள் கிடப்பில் இருந்த வழக்கில் நீதிபதி அதிரடி

லாக்கப் டெத்: டி.எஸ்.பி., உட்பட9 போலீசாருக்கு ஆயுள் சிறை 25 ஆண்டுகள் கிடப்பில் இருந்த வழக்கில் நீதிபதி அதிரடி

துாத்துக்குடி:விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளி இறந்த வழக்கில் டி.எஸ்.பி., உட்பட காவல் அதிகாரிகள் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதில், 25 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட வழக்கை ஓராண்டில் விசாரித்து நீதிபதி அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார்.துாத்துக்குடி, மேல அலங்காரத்தட்டு பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் 43; உப்பள தொழிலாளி. இவர், வெடிகுண்டு தொடர்பான வழக்கிற்காக, 1999 செப்., 17ல் விசாரணைக்காக தாளமுத்துநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அப்போதைய எஸ்.ஐ., ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், அவரிடம் விசாரித்தனர். காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த வின்சென்ட், மறுநாள் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதில் வின்சென்ட் இறந்ததாக கூறி, அவரது மனைவி கிருஷ்ணம்மாள் புகார் அளித்தார்.ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தப்பட்டு, வின்சென்ட் மரணம் தொடர்பாக எஸ்.ஐ., ராமகிருஷ்ணன், காவலர்கள் சோமசுந்தரம், ஜெயசேகரன், ஜோசப்ராஜ், பிச்சையா, செல்லதுரை வீரபாகு, சிவசுப்பிரமணியன், சுப்பையா, ரத்தினசாமி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு, 25 ஆண்டுகளுக்கு பின், கடந்த ஆண்டு ஜூன் மாதம், துாத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஓராண்டாக நடந்து வந்த இந்த வழக்கில், 13 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. வழக்கில், 38 ஆவணங்கள் குறையீடு செய்யப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவன், வழக்கில் தொடர்புடைய, 11 பேரில், 9 பேருக்கு ஆயுள் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அப்போதைய எஸ்.ஐ., ராமகிருஷ்ணன், தற்போது ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.,யாக உள்ளார். சோமசுந்தரம், நில அபகரிப்பு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், பிச்சையா அதே பிரிவில் எஸ்.எஸ்.ஐ.யாகவும் உள்ளனர்.ஜெயசேகரன், ஜோசப்ராஜ், செல்லதுரை, வீரபாகு, சுப்பையா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டனர். ஓய்வு பெற்ற காவலர் சிவசுப்பிரமணியன், ரத்தினசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறையில் அடைப்பு

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரும், துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் பரிசோதனை முடிந்த பின், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.இதில், தற்போது போலீஸ் பணியில் உள்ள டி.எஸ்.பி., உட்பட மூவரும், 24 மணி நேரத்திற்குள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என்றும், தண்டனையை எதிர்த்து இவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Dharma
ஏப் 06, 2025 08:41

உயர் நீதி மன்றத்தில் ஏதாவது காரணம் காட்டி விடுதலை செய்யப்படுவார்கள்.


VENKATASUBRAMANIAN
ஏப் 06, 2025 08:41

நாடு விளங்கிடும். இவர்கள் புரோமோஷன் வாங்கி கொண்டு நல்ல சம்பளம் பெற்று கொண்டு இத்தனை வருடங்களாக இருந்து வந்துள்ளனர். இப்படி 25 வருடங்கள் கழித்து நீதி வந்தால் மற்றவர்கள் எப்படி பயப்படுவார்கள். நீதிமன்றங்களுக்கு இது புரியவேண்டும்


நிக்கோல்தாம்சன்
ஏப் 06, 2025 08:18

எவ்வளவு காலம், அய்யகோ இந்த ஒரு இழிநிலை மாறவே மாறாதா?


Kanns
ஏப் 06, 2025 08:04

Good. Only Court Punished. Police Superiors Not Punished Erring Police. Abolish Entire Police Suoeriors. Create Seperate AntiPoliceForce to Defame-Arrest-Prosecute-Convict All Erring Policr incl Public Hanging s /Encounters for Dreaded Criminals


R.RAMACHANDRAN
ஏப் 06, 2025 07:05

அரிதினும் அரிதாக வழக்கில் சிக்கவைக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.இந்த நாட்டில் அரசு பணிகளில் உள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள் கடும் தண்டனை அளிக்க வேண்டிய குற்றவாளிகளாக உள்ளனர்.


Mohamed rafi Syed
ஏப் 06, 2025 07:04

சரியான தீர்ப்பு, இதுபோல் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது அதற்கும் விடிவுகாலம் பிறக்க வேண்டும், நல்ல நீதிபதிகள் இந்த வழக்குகளுக்கு உதவி செய்ய வேண்டும், பாமர மக்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள், நீதிபதிகளே நீதியை நிலை நாட்டுங்கள், நன்றி. சை முஹம்மது ரஃபி, ஒன்றிய தலைவர், மனித நேய மக்கள் கட்சி, திருக்கோயிலூர்


சமீபத்திய செய்தி