லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர் நியமனம்
சென்னை:லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை, தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக, லோக் ஆயுக்தா என்ற அமைப்பு இயங்கி வருகிறது. லோக்ஆயுக்தா அமைப்பின் புதிய தலைவராக, ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் ஏற்கனவே பொறுப்பு தலைவராக பதவி வகித்து வந்தார். நீதித்துறையை சாராத உறுப்பினர்களாக, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவராக உள்ள ராமராஜ் மற்றும் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய முன்னாள் உறுப்பினர் ஆறுமுகமோகன் அலங்காமோனி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, மனிதவள மேலாண்மைத் துறை செயலர் பிரகாஷ் பிறப்பித்துள்ளார்.