உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 2 நாள் பிரசாரம்: பிரதமர் மோடி இன்று வருகை

தமிழகத்தில் 2 நாள் பிரசாரம்: பிரதமர் மோடி இன்று வருகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். மாலையில் வரும் மோடி, தி.நகர் பனகல் பார்க் அருகில், ரோடு ஷோ நிகழ்ச்சி வாயிலாக, பா.ஜ., வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்கிறார். இதில், தென்சென்னை வேட்பாளர் தமிழிசை, மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் செல்வம், வட சென்னை வேட்பாளர் பால்கனகராஜ், திருவள்ளூர் வேட்பாளர் பொன்.பாலகணபதி, ஸ்ரீபெரும்புதுார் த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால், காஞ்சிபுரம் பா.ம.க., வேட்பாளர் ஜோதி வெங்கடேசன், அரக்கோணம் பா.ம.க., வேட்பாளர் பாலு பங்கேற்கின்றனர். சென்னையில் முதல் முறையாக நடக்கும் ரோடு ஷோ நிகழ்ச்சியில், இரண்டு லட்சம் பேரை பங்கேற்க வைக்க பா.ஜ., திட்டமிட்டு உள்ளது. இரவு ராஜ் பவனில் மோடி தங்குகிறார். நாளை காலை அவர், வேலுாரில் நடக்கும் பொதுக் கூட்டத்தில், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவு திரட்டுகிறார்.மதியம் கோவை மேட்டுப்பாளையத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், நீலகிரி வேட்பாளர் முருகனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். அதில், கோவையில் போட்டியிடும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் வேட்பாளர்கள் பங்கேற்கின்றனர்.மீண்டும் வரும் 13ம் தேதி பெரம்பலுாரிலும், 14ம் தேதி விருதுநகரிலும், 15ம் தேதி திருநெல்வேலி பொதுக் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

முருகன்
ஏப் 09, 2024 11:15

ஜெயலலிதா ,எம்ஜிஆர், காமராஜர், தமிழ் மீது பாசம் பொங்க போகிறது


Durai
ஏப் 09, 2024 11:03

இந்த முறை பாஜக மற்றும் கூட்டணிகள் தமிழகத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் மீண்டும் மோடி


Hari Bojan
ஏப் 09, 2024 10:04

எனது ஓட்டும் என் குடும்பத்தாரின் ஓட்டும் கண்டிப்பாக பிஜேபி க்குத்தான் நாடு முன்னேற இவர்கள்தான் முக்கியமானவர்கள் பொய்யும் புரட்டுமாக திரியும் டிஎம்கே மற்றும் ஏடிஎம்கே நம்மை மீண்டும் மீண்டும் முட்டாள்கள் ஆக்குவதிலேயே குறியாக திரிகின்றனர்


சிவம்
ஏப் 09, 2024 08:58

மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால் எந்த ஆசையும் இல்லாத துறவி போல வாழும் பிரதமர், தேசம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த வயதில் இவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறார். தேசம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் அனைவரும் அவர் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.


Ambikapathy Muniaraj
ஏப் 09, 2024 09:17

துறவிக்கு கோடி ரூபாய் flight


Indian
ஏப் 09, 2024 08:44

ரொம்ப சந்தோசம் கண்டிப்பாக தி மு க வுக்கு வோட்டு போட்டுருவோம்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி