உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மோசடி புகாருக்கு தேவநாதன் மறுப்பு

மோசடி புகாருக்கு தேவநாதன் மறுப்பு

திருப்புவனம்,:மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் நடந்த மோசடி தொடர்பான புகாருக்கு சிவகங்கை தொகுதி பா.ஜ., கூட்டணி வேட்பாளர் தேவநாதன் மறுப்பு தெரிவித்துள்ளார். சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளதாகவும் அவர் பதிலளித்துள்ளார்.சென்னையில் மயிலாப்பூர் நிதி நிறுவனம் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. இதில் சிவகங்கை தொகுதி பா.ஜ.,கூட்டணி வேட்பாளர் தேவநாதன் தலைவராக வந்த பின்பு 524 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும், தேவநாதன் வழங்கிய செக் நான்கு மாதங்களாக பணம் இன்றி திரும்பி வந்ததாகவும் அவருக்கு அண்ணாமலையும், தமிழிசையும் ஆதரவு அளிப்பதாகவும் தமிழக காங்., ஊடகம், செய்தித்துறை தொடர்பு தலைவர் ஆனந்த்சீனிவாசன் குற்றம் சாட்டியிருந்தார்.நேற்று திருப்புவனத்திற்கு பிரசாரத்திற்கு வந்த தேவநாதன் இதற்கு பதிலளித்தார்.அவர் கூறியது: மயிலாப்பூர் நிதி நிறுவனம் 150 வருட பாரம்பரியமிக்க நிறுவனம். 20 ஆண்டுகளாக அதன் தலைவராக இருக்கிறேன். அதன் ஆண்டு வருமானம் கடந்தாண்டு கூட அதிகரித்துள்ளது. அங்குள்ள டெபாசிட்தாரர்களை தூண்டி விட்டு சிதம்பரம் உள்ளிட்டோர் பிரச்னை செய்கின்றனர். என்னுடைய பிரசாரத்தை முடக்கும் வண்ணம் தவறான தகவல்களை கூறி குற்றம் சாட்டியுள்ளனர். இதனை நாங்கள் சட்டப்படி சந்திப்போம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி