உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதுவரை ரூ.208 கோடி பறிமுதல்; தேர்தல் முடிந்தாலும் கட்டுப்பாடுகள் தொடருமாம்: சத்யபிரதா சாஹூ

இதுவரை ரூ.208 கோடி பறிமுதல்; தேர்தல் முடிந்தாலும் கட்டுப்பாடுகள் தொடருமாம்: சத்யபிரதா சாஹூ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் இதுவரை ரூ.208.41 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தேர்தல் முடிந்தாலும் ஜூன் 4 வரை பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை பறக்கும்படை சோதனையில் ரூ.208.41 கோடி ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ரூ.4.53 கோடி மதிப்புள்ள மது பாட்டில்கள்; ரூ.99.38 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களும் அடங்கும். தாம்பரத்தில் பிடிபட்ட ரூ.4 கோடி தொடர்பாக தேர்தல் சிறப்பு குழு விசாரணை நடைபெறுகிறது. ரூ.1 கோடிக்கு மேலாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் இதனை தேர்தல் சிறப்பு குழு விசாரிக்கிறது. இது தொடர்பாக செலவின பார்வையாளர் அறிக்கை சமர்பிக்க உள்ளார்.இதுவரை 36.4 சதவீத பூத் ஸ்லிப்கள் வழங்கப்பட்டுள்ளன. விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்.,19ல் தேர்தல் முடிந்தாலும், ஜூன் 4ம் தேதி வரை பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Venkatasubramanian krishnamurthy
ஏப் 09, 2024 12:57

அரசியல் கட்சிகளை அடக்கத் திராணியில்லாத தேர்தல் ஆணையம் அவர்களிடம் கூனிக்குறகிவிட்டு பொதுமக்கள் மீது தங்களது பொல்லா அதிகாரத் திமிரைக் காட்டுகிறது தேர்தல் முடிந்தபிறகு வாக்குப் பெட்டிகளை அடைகாக்கிற பொறுப்பு தேவைப்படுகிற ஆணையம் ஏன் கட்டுப்பாடுகளை நீட்டிக்கிறது? அரசியல்வாதிகளின் பதவி சுகத்திற்காக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும், வியாபாரமும் பாதிக்கப்படாததை ஆணையம் உறுதி செய்ய வேண்டும்


RAAJ
ஏப் 08, 2024 22:12

உருப்படாத தேர்தல் ஆணையம். ராசாவின் காரை சோதனை செய்ய பயம். வியாபாரிகள் பொருள்கள் வாங்க சென்றால் அவர்களிடம் உள்ள பணத்தை பறிமுதல் செய்கின்றனர் கோழை அதிகாரிகள்


ஆசாமி
ஏப் 08, 2024 19:14

மக்களை பத்தி எவன் யோசிக்கறான். பிராடுகள்


RAAJ68
ஏப் 08, 2024 18:10

டுபாக்கூர் செயலற்ற தேர்தல் ஆணையம் ராசாவின் வாகனத்தை சோதனை செய்ய பயம் வணிகர்கள் மளிகை வாங்குவதற்கு 30,000 எடுத்துச் சென்றால் பணத்தை பிடுங்குகிறார்கள் இவர்கள் உருப்படவே மாட்டார்கள்.


venkat
ஏப் 08, 2024 17:37

ஏப்ரல் 19 ஓட எலக்சன் முடிஞ்சு போச்சு அதுக்கப்புறம் மூடிட்டு கம்முனு இரு அது என்ன ஜூன் நாலு வரைக்கும் அப்ப யாருமே எதுவுமே பண்ண வேணாம் வாழவே வேண்டாமா


Rengaraj
ஏப் 08, 2024 17:24

சட்டம் மட்டுமே பத்தாது சட்டத்தின் மீது பயம் வரவேண்டும் மக்கள் மன்றத்தில் தேர்தல் கமிஷன் செல்வாக்கு கூடவேண்டும் பணம் பட்டுவாடா நடக்கும் ஒரு தொகுதியில் தேர்தலை நிறுத்துவதுடன் அடுத்த பொதுத்தேர்தல் வரை தேர்தலே நடத்த முடியாது என்று அறிவித்துதான் பாருங்களேன் யாராவது நீதிமன்றம் செல்வார்கள் விவாதத்துக்கு வரட்டும் ஏதாவது ஒரு முடிவுக்கு வந்துதான் ஆகவேண்டும்


V Kumar
ஏப் 08, 2024 14:01

ரூபாய் கொண்டு சென்றால் பணம் பறிமுதல் எதற்கு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படும் நேர்மையான முறையில் ஓட்டுப்பதிவு நடக்காது சரிதான் தமிழ்நாடு, கேரளா போன்று மாநிலம் முழுவதும் ஒரே நாளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் ஏப்ரல் வாக்குப்பதிவு எனும்போது ஏப்ரல் தேதிக்கு பிறகு பண பரிவர்த்தனைக்கு தடை எதற்கு? அதன் பின்பு மக்கள் பணம் பெற்றால் போட்ட ஓட்டு மாறிவிடுமா? படித்தபடிப்பின் தன்மையை உணர்ந்து செயல்படுங்கள் அதிகாரவர்க்கமே


Ramalingam Shanmugam
ஏப் 08, 2024 13:48

இப்புடி வாங்கி அப்புடி கொடுக்க போறீங்க ஈரோட்டில் என்ன செஞ்சிங்க நீங்க


மேலும் செய்திகள்









புதிய வீடியோ