உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: ''தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும்'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த கட்சி கூட்டத்தில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் யாத்திரை மூலமாக கட்சியை பட்டி தொட்டி எல்லாம் எடுத்து சென்ற அண்ணாமலைக்கு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். அகில இந்திய தலைமை என்ன முடிவு எடுக்கிறது என்று அறிந்து, அதை ஏற்று கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். தேர்தலுக்காக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

வெற்றி கூட்டணி

தலைமை சொல்வதை அனைவரும் கேட்க வேண்டும். கூட்டணி குறித்து ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்தால், அது வேறு விதமாக போய்விடும். நமது கூட்டணி உறுதியான கூட்டணி, இறுதியான கூட்டணி. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும். இந்த கூட்டணி சாதாரண கூட்டணி அல்ல. வெற்றி கூட்டணி.

வெற்றி

எங்களது நியாயமான கூட்டணி, ஊழல் இல்லாத கூட்டணி. தே.ஜ., கூட்டணி ஆட்சி வருவதற்கு பாடுபட வேண்டும். பூத் கமிட்டியில் இருப்பவர்கள் வேலை செய்கிறார்களா என்று பாருங்கள். பூத்தை செம்மை படுத்தினால் தான் வெற்றி அடைய முடியும். எத்தனை தொகுதி, எப்படி கூட்டணி என்பதை எல்லாம் நாம் சொல்ல முடியாது. அமித்ஷா, இ.பி.எஸ்., சேர்ந்து முடிவு எடுப்பார்கள். எனக்கு அதிகாரம் தொண்டர்களை பாதுகாப்பது தான். எங்களது தொண்டர்களுக்கு காலில் அடிபட்டால், அது எனக்கு கண்ணிலே ஏற்படும் வலி போன்றது. நான் தொண்டர்களை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறேன். கட்சியை வளர்க்க வேண்டும். தமிழக அரசுக்கு அதிகாரம் வேண்டும், தமிழக மக்கள் அதிக பயன் அடைய வேண்டும். மத்திய அரசிடன் இருந்து தமிழகத்திற்கு அதிக நிதி வர வேண்டும் என்பதில் தமிழக பா.ஜ., உறுதியாக இருக்கிறது. கச்சத்தீவை பிரதமர் மோடி நினைத்தால் தான் மீட்க முடியும். இவர்கள் வெற்று தீர்மானம் போட்டு ஒன்றும் பயன் இல்லை. இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.முன்னதாக, நயினார் நாகேந்திரனுக்கு, வேல் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

pmsamy
ஏப் 20, 2025 07:06

பல காலமாக தாமரை மலர்கள் தமிழகத்தில் மலர்ந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால் பாஜகவிற்கு இங்கு இடம் இல்லை


பல்லவி
ஏப் 19, 2025 23:25

அதன் படி நெல்லையப்பர் கோவில் அருகே அமைந்துள்ள நயினார்குளத்தில் மலர வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது


rajendra kumar
ஏப் 19, 2025 22:50

அப்ப இதுவரைக்கும் தாமரை மலரவில்லை அதானே . தற்போது இலையுதிர் காலம் வேறு .


J.Isaac
ஏப் 19, 2025 20:13

தேர்தலுக்கு ஒரு வருடம் இருக்கிறது.


TRE
ஏப் 19, 2025 19:09

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்


TRE
ஏப் 19, 2025 19:03

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் நயினார் நாகேந்திரன்


Ray
ஏப் 19, 2025 18:59

"நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு மேலைத் தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம் குலத்தளவே ஆகுமாம் குணம்" - ஔவை ஆம்பல் என்பது ஒரு நீர்வாழ் தாவரமாகும், இதன் வேர்த்தண்டுக் கிழங்கிலிருந்து தோன்றும் இதன் இலை, நீர்ப்பரப்பிற்கு மேல் வந்து மிதக்கும். இதன் வளர்ச்சி நீர் மட்டம் எதுவரை இருக்குமோ அதுவரை இருக்கும். அதற்கு மேலும் நாலடி வளர்வேன் என்று வளர முடியாது. அடியிலுள்ள நீர்மட்டம் உயர உயர ஆம்பலின் உயரமும் உயரும். ஆம்பல் உயருவதற்கு நீர் மட்டுமே காரணம். இது போன்றே ஒருவனுடைய நுண்ணறிவும் தான் கற்ற நூல்களைப்பொருத்தே அமையும். நல்ல நூல்களைப் படிக்கப் படிக்க அறிவு பெருகும். மதிப்பு கூடும். முற்பிறப்பில் செய்த நற்பேற்றின் அளவுக்கு ஏற்பவே ஒருவரின் வாழ்வில் செல்வம் வந்து குவியும். தான் பிறந்த குலத்திற்கு ஏற்பவே ஒருவனுக்கு நல்லியல்புகள் வாய்க்கப் பெறும்.


K.Ramakrishnan
ஏப் 19, 2025 18:24

உங்கள் பதவியையாவது தக்க வைத்துக் கொள்வீர்களா?


venugopal s
ஏப் 19, 2025 17:57

தமிழகத்தில் தாமரை ஏற்கனவே மலர்ந்து குப்புற கவிழ்ந்து விட்டது இவருக்கு தெரியாதா?


J.Isaac
ஏப் 19, 2025 17:33

அப்போ இரட்டை இலை நிலமை ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை