வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஒடிசா தென்பகுதிக்கும், மழை எச்சரிக்கை விட்டுள்ள நான்கு தமிழக மாவட்டங்களுக்கும் இடையே உள்ள பகுதியை விட்டுட்டு மேற்கு மாவட்டம் போய் மழை பெய்யுமாக்கும். நல்ல வானிலை மையம்.
கோவையில் லேசாக மழை பெய்து
சென்னை: கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு ஒரிசாவின் உள் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா- சத்தீஸ்கர் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழக்கக்கூடும். மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப் 27) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஒடிசா தென்பகுதிக்கும், மழை எச்சரிக்கை விட்டுள்ள நான்கு தமிழக மாவட்டங்களுக்கும் இடையே உள்ள பகுதியை விட்டுட்டு மேற்கு மாவட்டம் போய் மழை பெய்யுமாக்கும். நல்ல வானிலை மையம்.
கோவையில் லேசாக மழை பெய்து