உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், வேறு வழக்குகளில் தேவையில்லை என்றால் உடனடியாக விடுதலை செய்யவும் உத்தரவிட்டது.பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர் மீது வேறு சில குற்றச்சாட்டுகளுக்காகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=picv5bio&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனை எதிர்த்த சங்கரின் தாயார் கமலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வு இன்று (ஆக.,9) விசாரணைக்கு வந்தது. அப்போது, 'தொடர்ந்து அவதூறு கருத்துகளை கூறி வந்ததால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தோம்,' என போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு பதிலளித்து வாதிட்ட சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர், 'சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை' எனத் தெரிவித்தார்.அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததை அடுத்து, சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை நீதிபதிகள் ரத்து செய்து தீர்ப்பளித்தனர். மேலும், ''வேறு வழக்குகளில் தேவைப்படாவிட்டால் உடனடியாக சவுக்கு சங்கரை விடுதலை செய்ய வேண்டும். சவுக்கு சங்கரின் அவதூறு பேச்சுக்கு தண்டனை கொடுக்கலாமே தவிர, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க முடியாது. அரசின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக குண்டர் சட்டத்தை பயன்படுத்துவது தவறு'' என நீதிபதிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

N.Purushothaman
ஆக 09, 2024 14:58

கருணாநிதி கருத்துப்படியே பார்த்தால் கூட அவர் குண்டாக இல்லை .பின்னர் ஏன் குண்டர் சட்டம் ? மானங்கெட்ட மாநில அரசின் நடவடிக்கையால் அரசின் மானம் கப்பலேறுகிறது ....


RAMAKRISHNAN NATESAN
ஆக 09, 2024 14:23

காவல்துறை மீதான அதிகாரம் கவர்னரிடம் கொடுக்கப்பட வேண்டும் .....


Mohan das GANDHI
ஆக 09, 2024 13:40

சவுக்கு சங்கர் நேர்மையான உண்மையான ஊடகவியலாளர் என்பதை நீதிபதிகள் அறிந்து இந்த விடுதலை முடிவு தீர்ப்பானது திமுக ஸ்டாலின் அவருக்கு எதிராக ஏசுபவர்களை வஞ்சிக்கிறது பொய் வழக்குகளை போட்டு சிறையில் அடைக்கிறார்கள் தமிழக போலீஸ் மூலம்? இதை போலீஸ் உயர் தார் அதிகாரிகளும் ஸ்டாலின் திமுகவிற்கு கொத்தடிமைகளாக வேலை செய்கிறார்கள் நேர்மையற்று என்பதே உண்மை நிலவரம் ? தமிழ்நாட்டில் போலீஸ் துறை இவ்வளவு கேடுகெட்டுள்ளது என்பதே இந்த ஆதாரம் குண்டர் சட்டம் ETC., இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே திமுக ஹிட்லர் ஆட்சி ஊழல், அராஜகம், கொலை, கொள்ளை நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பின்மை, விலைவாசி ஏற்றம் வரிகள் ஏற்றம் என கொள்ளைக்கூட்ட திமுக தெலுங்கு கும்பல்களிடம் தமிழன் சிறையில் உள்ளதைப்போல வாழ்கிறார்கள் அதிக பயத்துடன் எது நடக்கும் எந்நேரத்திலும் என்று? திமுக ராஜா ஆட்சி உடனே டிஸ்மிஸ் செய்வதே நல்லது வங்காளதேசத்தில் ஆனதைப்போல தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரி மாணவர்கள் போராட்டங்கள் அரம்பிக்காமல் இருப்பதே நலம் ஸ்டாலின் லாயக்கற்ற முதலமைச்சர் என்பதே நிரூபணம்


Mohanakrishnan
ஆக 17, 2024 16:14

இந்த பதிவிற்க்காக குண்டர் சட்டம் போடாமல் இருந்தால் சரி


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 09, 2024 12:59

ஒருவரை தவறாக கைது செய்ததற்கும், கைது செய்ய சொன்னதற்கும், இரு நூறு ரூபாய் மகளிர் அணியை விட்டு துன்புறுத்தியதற்கும் தண்டனை ஏதும் இல்லையா கோப்பால்?


vbs manian
ஆக 09, 2024 12:31

சங்கர் இப்போதாவது கடவுளை நம்புவாரா.


Raj Kamal
ஆக 09, 2024 14:08

எடபடியாரை நம்புவார். அவருக்கு விசுவாசமாய் இருந்தாக வேண்டும்.


அஸ்வின்
ஆக 09, 2024 12:16

வரவேற்க தகுந்த தீர்ப்பு


RAMAKRISHNAN NATESAN
ஆக 09, 2024 11:52

குண்டர் சட்டம் பாய அவர் என்ன குற்றம் செய்தார் ன்னு கனம் பெரியவர் கேட்கலையா ????


vadivelu
ஆக 09, 2024 12:28

கேட்டுத்தான் காவல் துறை சரியான பதிலை கொடுக்காததால் தீர்ப்பு.


RAMAKRISHNAN NATESAN
ஆக 09, 2024 14:21

விசாரணையின்போது கேட்டுப்பதில் பெற்றும் பயனில்லை.. கனம் பெரியவர் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.. ஊடகங்களில் தீர்ப்புதான் பேசப்படும் .....


S.VENKATESAN
ஆக 09, 2024 11:47

நாகரீகமற்ற முறையில் அரசியல் வாதிகள் பேசுவது கருத்து சுதந்திரமாக கருதப்படுகிறது மற்றவர்கள் பேசினால் அது தவறாகி விடுகிறது சட்டம் அனைவருக்கும் சமமே


Raja Vardhini
ஆக 09, 2024 11:44

சபாஷ்.. சிங்கம் வெளியே வரட்டும்.


ஆரூர் ரங்
ஆக 09, 2024 11:40

நேர்மையில் ஸ்டாலினுக்கும் ஷங்கருக்கும் போட்டி வைக்கலாம்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ