உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் 50 சதவீதம் நிறைவு: உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு தகவல்

மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் 50 சதவீதம் நிறைவு: உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை தோப்பூர் எய்ம்ஸ் கட்டுமானப் பணியை விரைவுபடுத்த தாக்கலான வழக்கில், 2026 ஜனவரியில் முதற்கட்ட திட்டப் பணி நிறைவடையும். தற்போது 50 சதவீத பணி முடிந்துள்ளது என மத்திய அரசு தரப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது.

மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:

மதுரை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு, 2018 ஜூன், 20ல் ஒப்புதல் அளித்தது. கட்டுமானத்திற்கு நிதி ஒதுக்கி டெண்டர் அறிவிப்பு வெளியிட, 2018ல் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். 2018 டிச., 6ல் விசாரணையின்போது மத்திய அரசு, 'கேபினட் ஒப்புதல் கிடைத்தபின் எய்ம்ஸ் கட்டுமானப் பணி துவங்கி, 45 மாதங்களில் முடிந்து, பயன்பாட்டிற்கு வரும்' என அறிக்கை சமர்ப்பித்து வழக்கு முடிக்கப்பட்டது. கட்டுமானப் பணியை விரைவுபடுத்த உத்தரவிட மற்றொரு வழக்கு தாக்கல் செய்தேன். 2021 ஆக., 17ல் நீதிபதிகள் அமர்வு, '36 மாதங்களில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என இந்நீதிமன்றம் எதிர்பார்க்கிறது' என உத்தரவிட்டது. இதை நிறைவேற்றாததால் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு தொடர்ந்தேன். 2023ல் விசாரணையின்போது, 'திருத்தியமைக்கப்பட்ட திட்ட மதிப்பீட்டின்படி, 1977.8 கோடி ரூபாயில் தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்கப்படும். இது, ஐந்து ஆண்டுகள், எட்டு மாதங்களில் நிறைவேற்றப்படும். இதற்காக, ஜப்பானின் சர்வதேச கூட்டுறவு ஏஜன்சியிடம் கடன் பெற, அந்நாட்டு அரசுடன், 2021 மார்ச், 26ல் ஒப்பந்தம் கையெழுத்தானது' என, மத்திய அரசு தரப்பு தெரிவித்தது. தோப்பூரில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இதர முன்னேற்றம் எதுவும் இல்லை. மத்திய அரசு தாமதமின்றி நிதி ஒதுக்க வேண்டும். கட்டுமானப் பணியை குறித்த காலவரம்பிற்குள் விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஆஜரானார். மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தராஜன்: முதற்கட்ட திட்டப்பணி, 2026 ஜன.,ல் நிறைவடையும். பின், பயன்பாட்டிற்காக எய்ம்ஸ் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். கட்டுமான பணி யில், தற்போது, 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள், 'மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது' என உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

venugopal s
ஆக 08, 2025 14:55

இந்த ஐம்பது சதவீதம் என்பதும் பொய். எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டிடம் தான் முதலில் கட்டப்படுகிறது, அதில் ஐம்பது சதவீதம் முடிந்துள்ளது. அதைத் தவிர ஊழியர்கள் குவார்ட்டர்ஸ் போன்ற மற்ற கட்டுமானங்கள் எல்லாம் முடிய இன்னும் குறைந்தது ஐந்து ஆண்டுகள் ஆகும்!


ஆரூர் ரங்
ஆக 08, 2025 22:16

தமிழக அரசு மருத்துவக்கல்லூரிகளில் எத்தனை ஊழியர்களுக்கு குவாட்டர்ஸ் உள்ளது?.


என்னத்த சொல்ல
ஆக 08, 2025 10:05

இதுதான் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு செய்யும் திட்டங்கள். இந்த அரசுக்கு முட்டு கொடுத்து, தாங்கி பிடிக்க ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. என்னத்த சொல்ல....


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 08, 2025 09:56

2026 தேர்தலில் குன்றிய அரசின் செங்கல் பிரச்சாரத்தை தடுப்பதற்காக ஒன்றிய அரசின் முன்னெச்சரிக்கை அறிவிப்பு


Mario
ஆக 08, 2025 09:38

கொஞ்சமாவது உண்மை பேசுமா இந்த குன்றிய அரசு


Narayanan Muthu
ஆக 08, 2025 09:11

50 சதவீத கட்டுமானம் முடிந்ததற்கு ஏதாவது புகைப்பட ஆதாரம் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளதா.


Oviya Vijay
ஆக 08, 2025 07:53

ஏன்னா என்னைக்குமே வேடிக்கை பார்க்கறதுக்கு மட்டும் தான் நீங்களே தவிர தமிழ்நாட்டை ஆள்றதுக்கு இல்லை...


செந்தில்குமார் திருப்பூர்
ஆக 08, 2025 07:29

திருட்டு மு க வின் உதயநிதி தூக்கி சென்ற செங்கல் கிடைத்த பிறகு தான் 100% கட்டுமான பணி நிறைவடையும்


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 08, 2025 07:28

ஆறு வருசத்திலே 50% முடிச்சவனுங்க, ஆறு மாசத்திலே மீதி 50% ஐ முடிப்பானுங்களாம் 2031 லே தான் முடியும். செங்கலுக்கு 2026 லே மறுபடியும் பிரச்சார வேலைலே டிமாண்டு.


அப்பாவி
ஆக 08, 2025 07:12

2019 லேயே 99 சதவீதம் கட்டி முடிச்சாச்சுன்னு உருட்டுனாங்களே...


சமீபத்திய செய்தி