உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை எய்ம்ஸ் முதற்கட்ட பணி அடுத்த ஆண்டு ஜனவரியில் முடியும்: 2வது கட்ட பணிகளை 2027ல் முடிக்க இலக்கு

மதுரை எய்ம்ஸ் முதற்கட்ட பணி அடுத்த ஆண்டு ஜனவரியில் முடியும்: 2வது கட்ட பணிகளை 2027ல் முடிக்க இலக்கு

மதுரை: மத்திய அரசு, ஜப்பானின் ஜெய்க்கா கூட்டுறவு முகமை நிதியின் கீழ் மதுரை தோப்பூரில் கட்டப்பட்டு வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திற்கான வகுப்பறை கட்டடம், விடுதி கட்டட முதற்கட்ட பணிகள் திட்டமிட்டபடி, 2026 ஜனவரியில் முடிவடையும் என எய்ம்ஸ் நிர்வாகம், 'எக்ஸ்' தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.மதுரை தோப்பூரில், 2024 மார்ச்சில் எய்ம்ஸ் கட்டுமான பணி துவங்கியது. இருகட்டமாக, 2 லட்சத்து 18,927 ச.மீ., பரப்பளவில் மருத்துவமனை கட்டடங்கள், மருத்துவ கல்லுாரி, விடுதி கட்டடங்கள், ஆசிரியர்கள் குடியிருப்புகள், மாணவ, மாணவியருக்கான தனி விடுதிகள், உணவகம், விளையாட்டுக் கூடம் போன்ற கட்டுமானத்தை, 33 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு 2021.51 கோடி ரூபாய். ஏற்கனவே தெரிவித்தபடி கட்டுமானம் துவங்கியதில் இருந்து, 18 மாதங்களுக்குள் முதற்கட்டமாக மருத்துவ கல்லுாரி, அவசர சிகிச்சை பிரிவு, உள், வெளி நோயாளிகளுக்கான வார்டு, மாணவர்களுக்கான விடுதிகள் கட்டி முடிக்கப்படும். தற்போது, 50 சதவீத பணிகள் முடிந் து உள்ளன. வரும் 2026 ஜனவரியில் முதற்கட்ட பணி முடிந்துவிடும்; 2027ல் மதுரை எய்ம்ஸ் வளாகம் முழுமை பெறும் என, அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாதிரி வீடியோ வெளியீடு

மதுரை எய்ம்ஸ் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் கட்டடங்கள் அமைய உள்ள முப்பரிமாண மாதிரி வடிவமைப்பு காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.மருத்துவமனையில் ஹெலிகாப்டர் தளம் இருப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.சோலார் வசதி, கார் பார்க்கிங், மருத்துவமனை கட்டடங்கள், விடுதிகள், ஆய்வுக்கூடங்கள், விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட அனைத்து பகுதிகள் கொண்ட பிரமாண்டமான கட்டடங்களின் மாதிரிகள் அடங்கிய முப்பரிமாண மாதிரி வீடியோ, முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Vijay D Ratnam
ஜூன் 18, 2025 15:52

கருணாநிதி மவனும் பேரனும் சேர்ந்து, தமிழ்நாட்டு மந்திரிமார்கள், எம்பிக்கள் புடை சூழ ஒரு மாபெரும் கூட்டத்தை நடத்தி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வாசலில் இருக்கும் சாலையின் நடுவே ஒரு ரவுண்டானா அமைத்து அதில் கருணாநிதிக்கு 40 அடியில் வெண்கலசிலையை கொண்டு வந்து வைக்கதான் போகிறார்கள். தமிழக மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள். மதுரையில் எய்ம்ஸ் வருத்துவமனை அமைக்கவேண்டும் என்று வாஜ்பாயிடம் சொன்னார், மன்மோகன் சிங்கிடம் சொன்னார். கருணாநிதியின் கனவு ஸ்டாலினால் நிறைவேறியது என்று சொல்லத்தான் போகிறார்கள். எவனா இருந்தாலும் எங்க தலையை பாத்துட்டுத்தேன் உள்ள போவணும், வெளியே வரணும், மேல போவோனும். அதற்கு முன் மத்திய அரசு முந்திக்கொண்டு அங்கே அரசியல்வியாதிகளின் சிலையை வைத்துவிடாமல் தேச விடுதலைக்கு போராடிய மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் சிலை அல்லது வ.உ.சிதம்பரம் பிள்ளை சிலை அல்லது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை வைக்க வேண்டும். என்னைக்கேட்டால் மருத்துவர் விஸ்வநாதன் சாந்தா அம்மையார் அவர்களின் திருவுருவ சிலையை அமைக்கலாம். யார் இந்த டாக்டர் சாந்தா, உலகம் முழுவதும் அறியப்பட்ட இந்தியாவின் புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணர் ஆவார். இவர் சென்னை அடையாறு புற்றுநோய்க் கழகத்தின் தலைவராகப் பணியாற்றியவர். இவர் மக்சேசே விருது, பத்மஸ்ரீ விருது, பத்ம விபூசண் போன்ற புகழ்பெற்ற விருதுகளைப் பெற்றுள்ளார். சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்றுள்ளார். அடையாறு புற்றுநோய்க் கழகத்திலே 1955 ஆம் ஆண்டில் பணியில் இணைந்த இவர், அதில் பல முக்கிய பதவிகளில் பணியாற்றினார். 1980 முதல் 1997 வரை அதன் இயக்குனராகப் பணியாற்றினார். உலக சுகாதார அமைப்பில் சுகாதாரம் குறித்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்தார். சென்னை மயிலாப்பூரில் பிறந்து சென்னையிலேயே உயர்நிலை பள்ளியில் படித்து, சென்னை மருத்துவக்கல்லூரியில் எம்.டி பட்டம் பெற்று தமிழ்நாட்டிலேயே மருத்துவ சேவை செய்து வளர்ந்த பச்சை தமிழர். மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு 30 அடியில் டாக்டர் வி.சாந்தா அம்மையார் அவர்களுக்கு வெண்கலச்சிலை அமைத்தால் பெருமையாக இருக்கும்


Iyer
ஜூன் 18, 2025 12:13

எந்த வியாதியையும் குணப்படுத்த முடியாத ""அல்லோபதி"" மருத்துவத்துக்கு கோடி கோடியாக செலவு செய்து ஆஸ்பத்ரிகளும், ஆபரேஷன் தியேட்டர்களும் கட்டி பணத்தை வீணடிக்கிறார்கள். எப்படிப்பட்ட கொடிய வியாதியையும் கணப்படுத்தும் தமிழர்களின் சித்த வைத்தியம், இயற்கை வைத்தியம் இவற்றைப்பற்றி எந்த அரசும் யோசிப்பதாக தெரியவில்லை.


Narayanan Muthu
ஜூன் 18, 2025 11:56

வரும் ஆனா வராது


Oviya Vijay
ஜூன் 18, 2025 10:51

நாடாளுமன்ற தேர்தலுக்காகவே அரைகுறையா முடிச்சு அவசரம் அவசரமா அயோத்தி ராமர் கோவிலை தொறந்தீங்களே... என்ன ஆச்சு... அங்கேயே உங்க கட்சி புட்டுக்கிச்சா... அதே மாதிரி முதற்கட்டமா 2026 ஜனவரில எய்ம்ஸ்ஸ தொறந்து நாங்களும் தொறந்துட்டோம் அப்படின்னு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னாடி சீன் போட பார்க்குறீங்க... ஆனாலும் உங்களுக்கு ஆப்பு அடிப்பாங்கல்ல... பொறுத்திருந்து தான் பாருங்களேன்... அரைகுறையா முடிக்காம ஒழுங்கா நல்லபடியா வேலைய முடிச்சு நல்லபேர் வாங்கப் பாருங்க... எலெக்ஷனுக்காக சீன் போடுற வேலையெல்லாம் இங்க வேணாம்... ஏன்னா என்னைக்குமே வேடிக்கை பார்க்கறதுக்கு மட்டும் தான் நீங்களே தவிர தமிழ்நாட்டை ஆள்றதுக்கு இல்லை...


ஆரூர் ரங்
ஜூன் 18, 2025 11:03

எப்படி சூப்பராக கட்டிக் கொடுத்தாலும் அவ்வப்போது உள்நோக்கமுள்ள வேண்டாத போராட்டம் நடத்தி சரியாக செயல்படாமலடிக்கப் போகிறது திராவிஷம். எதையோ குளிப்பாட்டி நடு வீட்டில் வைப்பது போல. எய்ம்ஸ் 100 சதவீதம் தேவையற்ற ஆணி. நன்மை செய்து துன்பம் வாங்க வேண்டாம்.


c.k.sundar rao
ஜூன் 18, 2025 09:58

AIIMS Madurai hospital should function as AIIMSDelhi with able and good doctors and not like state govt hospitals in TASMAC NADU.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை