உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி; சுற்றுச்சூழல் அனுமதிகோரி நிர்வாகம் விண்ணப்பம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி; சுற்றுச்சூழல் அனுமதிகோரி நிர்வாகம் விண்ணப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : மதுரை தோப்பூரில் 221 ஏக்கரில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடங்க உள்ள நிலையில் சுற்றுச்சூழல் அனுமதி கோரி மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது.இதில், உள்நோயாளிகள், வெளிநோயாளிகள், அவரச சிகிச்சை பிரிவு, மருத்துவக் கல்லுாரி, நர்சிங் கல்லுாரி, மாணவ, மாணவிகளுக்கான விடுதி, பணியாளர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை அமைய உள்ளது.மதுரை தோப்பூரில் 221 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. 2019 ஜனவரியில் பிரதமர் மோடி ரூ.1264 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்ட அடிக்கல் நாட்டினார். 150 படுக்கை கொண்ட தொற்று நோய்ப் பிரிவு துவக்கும் வகையில் திட்ட மதிப்பீடு ரூ. 1977.8 கோடியாக உயர்த்தப்பட்டது. ஜப்பானின் ஜெய்க்கா எனப்படும் பன்னாட்டு நிறுவனத்துடன் 2021 மார்ச்சில் கடனுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.மொத்த தொகையில் 82 சதவீதம் ஜெய்க்கா நிறுவனம் கடனாக தருவதாகவும் மீதி 18 சதவீதத் தொகையை மத்திய அரசு வழங்கும் என அறிவிக்கப்பட்டது.முதல் கட்டமாக சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் மாணவர்களுக்கான சேர்க்கை நடந்தது. ஆண்டுதோறும் 50 மாணவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் படிப்பை தொடர்ந்தனர். 2023 ஆக. 17ல் மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது.ஜெய்க்கா நிறுவனத்திடமிருந்து கடன் தொகை பெற்ற நிலையில் 33 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டதுபத்து தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் அவசர சிகிச்சை பிரிவு, தொற்று நோய் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கி பிரமாண்ட கட்டடம் அமைக்கப்படும். இதில் மருத்துவக்கல்லுாரி 7 தளங்களுடன் அமையவுள்ளது. பிரம்மாண்ட அரங்கம், இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு தனி விடுதி, நூலகம் உட்பட மொத்தம் 2 லட்சத்து 851 சதுரடி பரப்பளவில் இதர வசதிகளுடன் எய்ம்ஸ் வளாகம் கட்டப்படும். மேலும் 4 தளங்களுடன் 30 படுக்கைகளுடன் ஆயுஷ் மருத்துவ பிரிவும் அமைகிறது.மூன்றாவது ஆண்டாக கல்லுாரி சேர்க்கை சமீபத்தில் நடந்த நிலையில் மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தற்காலிகமாக திருமங்கலம் பகுதியில் மாணவர்கள் தங்குவதற்கும் வகுப்பறை மற்றும் விடுதி வசதிக்காகவும் வாடகை கட்டடம் பெறுவதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டது.அடுத்த கட்ட முன்னேற்றமாக சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது. இதனால் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ஆரூர் ரங்
ஜன 31, 2024 14:04

திமுக ஸ்டிக்கர்???? ஒட்ட அலைவதை நிறுத்தும் வரை தமிழகத்துக்கு எவ்விதத் திட்டமும் கொடுப்பது வீண்


ஆரூர் ரங்
ஜன 31, 2024 11:18

நன்றி கெட்ட மாநிலத்துக்கு எய்ம்ஸ் ஒரு கேடா? ????பத்தாண்டுகளில் மோதி அரசு உதவியில் 12 மருத்துவக் கல்லூரிகள் உருவாகியுள்ளன. அதுவே தேவைக்கு அதிகம்.


VARUN
ஜன 31, 2024 14:15

உன்னைப்போல உள்ளவர் தமிழநாடுக்கு சாபக்கேடு ....


ஆரூர் ரங்
ஜன 31, 2024 11:14

வீணான திட்டம். யாருக்கும் நன்மையுமில்லை.


பாமரன்
ஜன 31, 2024 10:14

கல்யான ரிசப்ஷன் பத்திரிகை அடிச்சிட்டு மண்டப அலங்காரம் எல்லாம் பண்ணிட்டு இப்போ பொண்ணோட ஜாதகத்தில் தோஷம் இருக்கான்னு பார்க்க ஜோசியர் கிட்ட போனானாம் ஒருத்தன்... ஏன்னு கேட்டா மாப்பிள்ளை பார்க்கனும்லன்னு எதிர் கேள்வி வேறு???? நான் மத்திய அரசு அல்லது பகோடாஸை பற்றி சொல்லலைங்கோ...????


Karmegam,Sathamangalam
ஜன 31, 2024 12:23

உன் வாய் உன் உருட்டு பாமரனுக்கு எப்போதும் பக்கோடா நினைப்புதான்...????


A1Suresh
ஜன 31, 2024 08:03

அது சரி கவர்னர் நிர்வகிக்கும் காஷ்மிரில் மட்டும் எப்படி ஜம்முவிற்கு ஒரு எய்ம்ஸ், காஷ்மீருக்கு ஒரு எய்ம்ஸ் என்று இரண்டுமே கட்டி முடிக்கப்பெற்றன? இங்கே தமிழகத்தில் ஒரு எய்ம்ஸ் கட்டவே இத்தனை தடங்கல்களா? 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்டப்பட்ட திட்டம். ஆமை வேகத்தில் பணிகள்


ஆரூர் ரங்
ஜன 31, 2024 11:19

காஷ்மீரில் கட்டப்பட்டுள்ளவை சிறியவை. அங்குள்ள மக்களுக்கு கொஞ்சம் நன்றியுணர்வுண்டு.


A1Suresh
ஜன 31, 2024 08:00

டபுள் எஞ்சின் சர்க்கார் வேண்டுமென்றே மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. நிலம் ஒதுக்குவது ஆகட்டும். இப்படி சுற்றுச்சூழல் அனுமதி என்று ஏகப்பட்ட தடங்கல்கள். 8 வழி சாலை முதல் பரந்தூர் விமான நிலையம் வரை பலப்பல முட்டுக்கட்டைகள். இதில் 10 வருடங்களில் மோடி சர்க்கார் என்ன சாதித்தது என்று கேள்வி வேறு. இப்படி அலைய வைத்ததால் மஹாராஷ்டிரா அரசு கவிழ்ந்து போனது. அடல்ஜி சேது முதல் நவி மும்பை விமானநிலையம் வரை, டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலை முதல் புல்லெட் ரயில் வரை பணிகள் துரிதமாக நடக்கின்றன. அதற்குத்தான் தமிழகத்திலும் டபுள் எஞ்சின் சர்க்கார் வேண்டும்


Seshan Thirumaliruncholai
ஜன 31, 2024 07:39

மருத்தவ மனைகள் பெருக பெருக நோயாளிகளின் பெருக்கமும் அதிகமாகின்றன. காரணம் மக்களின் வாழ்க்கை முறை இயற்கையை அனுசரித்து இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. உணவு முறை அதாவது அளவோடு சாப்பிடுவது குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவது முக்கியமாய் இரவு எட்டுமணிக்கு மேல் சாப்பிடக்கூடாது. சத்தான உணவு என்பது பொதுவாக இல்லை.காரணம் இயற்கை விவசாயம் கட்டுபடியாகாது. மருத்தவ மனைகள் மட்டும் நம்பி இருப்பது குடும்பங்களில் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்


Narayanan Muthu
ஜன 31, 2024 07:18

ஒவ்வொரு வருடமும் தேர்தல் என்ற முறையை அமுல்படுத்தினால் மட்டுமே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் போல் உள்ளது. தமிழக மக்கள் புத்திசாலிகள் ஏமாற்ற நினைப்பவர்கள் ஏமாந்துதான் போவார்கள்.


அப்புசாமி
ஜன 31, 2024 06:47

அடடே... 95 சதவீதம் கட்டி முடிச்சாச்சு போலிருக்கே... முருகரின் விடா முயற்சிக்கு வெற்றி.


Nagendran,Erode
ஜன 31, 2024 08:50

அப்பு வழக்கம் போல அந்த பாஞ்சி லட்சத்தையும் கேட்க வேண்டியதான?


மேலும் செய்திகள்