உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2027ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் மதுரை எய்ம்ஸ்!

2027ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் மதுரை எய்ம்ஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வரும் 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும்' என தகவல் அறியும் உரிமை சட்ட மனுவுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் பதில் அளித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uao6uwwm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2019 ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 221 ஏக்கரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடத்தின் திட்ட மதிப்பு, தற்போது 2,021 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.இதன் கட்டுமானப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் குறித்து, தென்காசியைச் சேர்ந்த பாண்டியராஜா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு இருந்தார்.அதில், எய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, எப்போது முதல் பயன்பாட்டுக்கு வரும் என்பது அவரது கேள்வி. அதற்கு எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வரும் 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும். முதற்கட்டமாக ரூ.1,118.35 கோடியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

சுந்தரம் விஸ்வநாதன்
டிச 08, 2024 22:36

புதுசா நோயாளிகள் உற்பத்தியாகுற வரைக்கும் இந்த மருத்துவ மனையை கட்டிக்கிட்டே இருப்பாங்களோ? இருந்தாலும் இருக்கும், எல்லாம் டெல்லி உஷ்... சமாச்சாரம்.ஒரு ராக்கெட் விடறதுக்கு நாலஞ்சு மாசம் போதுமாம், புதுசா ரயில் செஞ்சு விடறதுக்கு எட்டு மாசம் போதுமாம். ஆன நம்மூருக்கு ஒரு ஆசுபத்திரி கட்டறதுக்கு பத்து வருஷம் பத்தாதாம் என்ன கொடுமை சரவணா?


RAMESH
டிச 08, 2024 19:16

எய்ம்ஸ் உறுதி.......ஆனால் இளம் விதவைகள்...... உதயநிதி ஸ்டாலின் கனிமொழியின் இளம் விதவைகள் கூற்றுக்கு பதில் கூறுவாரா இல்லை ஒற்றை குவார்ட்டர் பாட்டிலுடன் ஓட்டு கேட்க வருவாரா


sankar
டிச 08, 2024 18:22

அதுக்குள்ள காணாம போன செங்கலை பத்தி தெரியணும்


Oviya Vijay
டிச 08, 2024 15:30

நாடாளுமன்ற தேர்தலுக்காக முழுமை பெறாமல் அவசர அவசரமாக திறக்கப்பட்ட அயோத்தி ராமர் கோவில் போல இந்த எய்ம்ஸ் மருத்துவமனையையும் 2026 தேர்தலுக்கு முன்னரே திறந்து மக்களிடம் சீன் போட வேண்டாம். எப்படி இருந்தாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெல்லப்போவதில்லை என்பதனை நினைவில் கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட பின்னர் திறந்தால் போதுமானது. அது தேர்தலுக்கு முன்னர் ஆனாலும் பரவாயில்லை தேர்தலுக்கு பின்னர் ஆனாலும் பரவாயில்லை...


Anvar
டிச 08, 2024 18:47

அப்படியே கட்டி முடிச்சிட்டாலும் நீங்கள் ஓட்டு போடா போவதில்லை.அப்புறம் எதுக்கு பாஸ் ஓவர் சீன் போடறீங்க


வைகுண்டேஸ்வரன்
டிச 08, 2024 13:54

சூப்பர்.


Rajan
டிச 08, 2024 13:48

முதல்ல அந்த செங்கல்லை திருப்பி கொடுக்க வேண்டும்னு கண்டீஷன் போடனும்


Saai Sundharamurthy AVK
டிச 08, 2024 13:30

மதுரையில் எய்ம்ஸ் வந்தால் என்ன, வராவிட்டால் என்ன? ஒன்றும் குடி முழுகிப் போகாது. கம்யூனிஸ்டுகள் இருக்கும் வரை எந்த டெவலப்மெண்ட்டும் நடக்காது. இவர்கள் சந்தோசமாக வாழ மதுரை ஒரு சொர்க்கம்.


RAMESH
டிச 08, 2024 19:18

உண்டியல் நபர்கள் இருக்கும் வரை உலகம் உருப்படி ஆகாது


அப்பாவி
டிச 08, 2024 13:27

10 வருஷமா கட்டிய ஒரே எய்ம்ஸ் இது ஒண்ணுதான். அதிலே 15 முறை 99 சதவீதம் வேலை முடிஞ்சதா நட்டாவால் அறிவிக்கப்பட்டு முருகரால் முட்டுக் குடுக்கப் பட்டதும் இதுவே. ரெண்டு இயக்குனர்களை அத்துவானத்தில் போட்டு இயக்கப்பட்டதும் இதுவே.


ஆரூர் ரங்
டிச 08, 2024 12:41

50 ஆண்டுகளாகியும் கோடிகளைக் கொட்டியும் கூவம் மணக்கவேயில்லை.அதனால் பல லட்சம் பேருக்கு உடல்நல பாதிப்புகள். தி.மு.க அசைந்து கொடுத்ததா? செலவழித்த நிதி நிதி ஆட்களிடம் சிக்கியுள்ளதுதான் மிச்சம்.


அப்பாவி
டிச 08, 2024 13:29

நமா மி கங்கே ... வாசனை தூக்கலா இருக்கு. வெறும் 35000 கோடி தான் கொட்டினோம்.


சாண்டில்யன்
டிச 08, 2024 19:05

தெனாலிராமன் வெறுங்கையை பட்டு பீதாம்பரம்ன்னு காட்டி சொன்ன மாதிரி மதுரை AIIMS அறிவார்ந்தவர்கள் கண்களுக்கு மட்டும்தான் தெரியும்னு சொல்லிட்டா போச்சு.


பாமரன்
டிச 08, 2024 12:37

ஓகே ஓகே இந்தியா விரைவில் வல்லரசாகும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை