உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன் சூறையாடல்: 4 தனிப்படை அமைத்து தேடும் போலீஸ்!

மதுரை மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன் சூறையாடல்: 4 தனிப்படை அமைத்து தேடும் போலீஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை மாவட்டம் வி.சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனை சூறையாடிய இருவரை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது வி.சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷன். இங்கு நேற்று இரவு ஏட்டு பால்பாண்டி என்பவர் மட்டும் பணியில் இருந்துள்ளார்.அப்போது அடையாளம் தெரியாத இரு நபர்கள் அத்துமீறி ஸ்டேஷனுக்குள் நுழைந்துள்ளனர். அங்கிருந்த போலீஸ் ஏட்டுவிடம் வாக்குவாதம் செய்த அவர்கள், பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் நாசமாகின. போலீஸ் ஏட்டுவை அறைக்குள் வைத்து வெளியில் தாழிட்ட அவர்கள், அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் பற்றி தகவல் பரவியதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.இதில், போலீஸ் ஸ்டேஷனை சூறையாடியது வி.சத்திரப்பட்டியை சேர்ந்த முத்துவேல் மகன் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் என்று தெரியவந்தது.பிரபாகரன் தந்தை முத்துவேல் என்பவரை, போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று விட்டதாக தவறாக கருதி, இந்த செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்வதற்காக, உசிலம்பட்டி டி.எஸ்.பி., தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.உதயகுமார் கைது போலீஸ் ஸ்டேஷன் சூறையாடப்பட்ட சம்பவம் பற்றிய தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் உதயகுமார், நேரில் சென்றார். அவரை போலீஸ் ஸ்டேஷனுக்குள் போலீசார் அனுமதிக்க மறுத்தனர். எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்த போலீசார், உதயகுமாரையும், அவருடன் வந்தவர்களையும் கைது செய்தனர். போலீஸ் ஸ்டேஷனை பார்வையிட வந்த முன்னாள் அமைச்சர் மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ., கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Natanasabapathy pillai
ஜூன் 15, 2025 17:05

டோப்பா ஆட்சியை ஒழித்து கட்டினால் தான் மக்கள் நிம்மதியாக இருக்க முடியும் அனைத்து துறைகளிலும் ஊழல் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது . ஆளும் கட்சியினரின் வன்முறைகள் கட்டுக்கு அடங்காமல் போகின்றன 2026 தேர்தலில் தி மு க வை வேரோடு அழிக்க வேண்டும்


ஆரூர் ரங்
ஜூன் 15, 2025 16:10

அமைதிப் பூங்காவாக..


rasaa
ஜூன் 15, 2025 10:12

இதுதான் திராவிட மாடல். குற்றவாளிகளை விடுவித்து நிரபராதிகளை தண்டிப்பதுதான் இந்த மாடலின் சிறப்பு.


சந்திரன்
ஜூன் 15, 2025 06:51

இப்படிபட்ட தைரியம் யாருக்கு வரும் மாடல் உபிஸ் தவிர


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 14, 2025 21:31

இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகைகளையும் கைது செய்தாலும் ஆச்சரியப்படமுடியாது


Anantharaman Srinivasan
ஜூன் 14, 2025 21:07

ரௌடியில்லை கொலை கொள்ளைக்காரனில்லை தீவிரவாதியில்லை. சாதரண இருவரை பிடிக்க 4 தனிப்படை அமைத்து தேடும் போலீஸ் இப்படியிருந்தால் எப்படி?


sridhar
ஜூன் 14, 2025 21:02

எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத கருமாந்திர ஆட் சீ சீ .


chinnamanibalan
ஜூன் 14, 2025 21:02

காவல் துறை என்றாலே, நாட்டு மக்களைக் காக்கும் கடமையை 24 மணி நேரமும் செய்யும், மக்களின் நம்பிக்கை மிக்க ஒரு துறை ஆகும். ஆனால் காவல் நிலையத்தை சூறையாடியுள்ள இந்த சம்பவம், ஆழ்ந்த கவலை அளிப்பதாகவும் , மக்களின் நம்பிக்கையை சீர்குலைப்பது போன்றும் உள்ளது.


Anantharaman Srinivasan
ஜூன் 14, 2025 20:58

சூப்பர் . ஏட்டு மாத்திரம் தனியாக ஸ்டேஷனில் எதுக்காக? இரவுநேரத்தில் பூட்டிவிட்டு காலையில் திறக்கலாமே.. சட்டம் ஒழுங்கு மக்கள் கையில். அதுதான் திராவிட மாடலின் speciality ..


Amar Akbar Antony
ஜூன் 14, 2025 20:28

முன்பெல்லாம் இந்தமாதிரி செய்திகள் பீகார், உ பி மற்றும் மத்யப்ரதேசத்தில் நடந்ததாக பத்திரிகைகளில் பார்க்கலாம். இப்போது அங்கே பரவாயில்லை போல் தெரிகிறது. மன்னராட்சியின் மாண்புகளில் இதுவும் ஒன்று.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை