மதுரை - துபாய் விமானம் ரத்து
அவனியாபுரம்: துபாயிலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் நேற்று காலை 11:10 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தது. பயணிகளை ஏற்றிக் கொண்டு அந்த விமானம் நேற்று மதியம் 12:20 மணிக்கு மதுரையிலிருந்து துபாய் புறப்பட தயாரானது. அப்போது அந்த விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. பயணிகள் அவதியுற்றனர்.