உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிஜிபி நியமன விவகாரம்; தலையிட ஐகோர்ட் மதுரைக்கிளை மறுப்பு

டிஜிபி நியமன விவகாரம்; தலையிட ஐகோர்ட் மதுரைக்கிளை மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது' என புதிய டிஜிபி நியமனம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது.தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் 31ல் முடிவடைகிறது. புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை துவக்க வேண்டும். பொறுப்பு டி.ஜி.பி.,யை நியமிக்கக் கூடாது என ஐகோர்ட் மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஆக 14) காலை விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், 'தேர்வு செய்யும் நடைமுறை துவங்கியுள்ளதா, இல்லையா என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் இன்று பகல் 2:15 மணிக்கு தெரிவிக்க வேண்டும்' என கூறி ஒத்திவைத்தனர்.இதையடுத்து, பிற்பகல் 2:15 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் அஜ்மல் கான், உள்துறை செயலாளரிடம் விபரம் பெற்றேன். புது டிஜிபி நியமன நடைமுறைகள் தற்போது தொடங்கி நடந்து வருகிறது', என்றார்.பின்னர், 'இச்சூழலில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது என கூறி ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதிகள் வழக்கு விசாரணையை முடித்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

subramanian
ஆக 14, 2025 15:20

திராவிட மாடல் அரசில் தூய்மை பணியாளர் முதல் வரை மிரட்டி வைக்க பட்டு உள்ளனர். ஒழிக திமுக


ஆரூர் ரங்
ஆக 14, 2025 15:12

தேர்தல் நேரத்தில் முதல்வருக்கு வேண்டப்பட்ட சிறுபான்மையின அதிகாரிக்கு டிஜிபி பதவி கொடுக்க திட்டம் என பேச்சு அடிபடுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை