உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் ரயில் தடம் புரண்ட சம்பவம்: 4 பேர் விசாரணை குழு அமைப்பு

மதுரையில் ரயில் தடம் புரண்ட சம்பவம்: 4 பேர் விசாரணை குழு அமைப்பு

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் போடி ரயில் தடம் புரண்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.நேற்று (அக். 31) காலை 7:00 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து மின்சார இன்ஜினுடன் மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்த போடி எக்ஸ்பிரஸ் ரயில் (20601) டீசல் இன்ஜின் மாற்றப்பட்டு புறப்படுகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியின் ஒரு சக்கரம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் பயணிகளுக்கு பாதிப்பில்லை. பின் தடம் புரண்ட பெட்டி கழற்றப்பட்டு மற்ற பெட்டிகளுடன் 2 மணி நேரம் தாமதமாக போடி புறப்பட்டுச் சென்றது.இவ்விபத்து குறித்து ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனை அதிகாரி, உதவி கோட்டப் பொறியாளர், உதவி போக்குவரத்து மேலாளர், உதவி மின் பொறியாளர் ஆகிய நால்வர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்ஜின் மாற்றியபோது பெட்டிகள் நகராமல் இருக்க வைக்கப்பட்ட தடுப்புக் கட்டைகளை அகற்றாததால் தடம் புரண்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
நவ 01, 2024 19:53

சதிகாரர்களை பிடித்து கடுமையாக தண்டிக்கவேண்டும். அப்படி செய்தால்தான் மற்ற சதிசெய்ய நினைப்பவர்களுக்கு ஒரு பயம் ஏற்படும். இப்படியே விட்டால் மக்கள் ஒரு பயத்துடன்தான் ரயிலில் பயணிக்கவேண்டி இருக்கும். அநேகமாக இந்த சதிகாரர்கள் உள்நாட்டு சதிக்காரர்களாகத்தான் இருக்கும்.எல்லோரையும் கூண்டோடு பிடித்து சிறையில் அடைத்து கடுமையாக தண்டிக்கவும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை