உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆன்லைன் மூலம் ரூ.11 லட்சம் ஏமாற்றிய மதுரை வாலிபர் கைது

ஆன்லைன் மூலம் ரூ.11 லட்சம் ஏமாற்றிய மதுரை வாலிபர் கைது

துாத்துக்குடி: ஆன்லைன் மூலம் ரூ.11 லட்சம் ஏமாற்றிய மதுரை வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் அருகே காயல்பட்டினத்தை சேர்ந்தவர் வாவு பாக்மி 47. இவரது உறவினர் ஜின்னாவின் அலைபேசி 'வாட்ஸ்ஆப்'ல் பகுதி நேர வேலை வாய்ப்புக்கான லிங்க் வந்தது.அதில் பணம் அனுப்புமாறு கூறியதால் வாவு பாக்மி, ஜின்னாவின் வங்கி கணக்கிலிருந்து சிறிது சிறிதாக 11 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைத்தார். ஆனால் வேலைவாய்ப்பு எதுவும் தராமல் ஏமாற்றியது தெரிய வந்தது.2023 நவ.,22ல் மதுரையைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் பணம் பெற்று ஏமாற்றியதற்கு வருத்தம் தெரிவித்ததோடு மூன்று தவணைகளில் ரூ.59 ஆயிரம் அனுப்பியுள்ளார். பின்னர் வாவுவின் குடும்பத்தினரின் படங்களை வெளியிட்டு அவதுாறாக தகவல் பரப்பினார். இதுகுறித்து வாவு துாத்துக்குடி எஸ்.பி.,யிடம் புகார் தெரிவித்தார். எஸ்.பி., பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் மதுரை தத்தனேரியை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் ஸ்ரீதர் 36, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மூன்று அலைபேசிகளை பறிமுதல் செய்து துாத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்