மேலும் செய்திகள்
யுடியூப் சேனலை பார்த்து அஞ்சுகிறது அரசு: சவுக்கு சங்கர்
5 hour(s) ago | 19
கோழி இறகு... விரிகிறது வணிகச்சிறகு!
6 hour(s) ago | 3
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வீரவநல்லூர் அருகே போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த ரவுடி பேச்சிதுரை 24, மருத்துவமனையில் இறந்தார். இதுகுறித்து சேரன்மகாதேவி மாஜிஸ்திரேட் ராஜலிங்கம் விசாரணை மேற்கொண்டார்.அம்பாசமுத்திரம் அருகே தென் திருபுவனத்தைச் சேர்ந்தவர் பேச்சிதுரை. கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் சந்துரு 23. ரவுடிகள். இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. மார்ச் 7 மாலையில் டூவீலரில் வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குழி வந்தனர். அப்போது காரில் சென்ற 3 பேரை அவர்கள் அரிவாளால் வெட்ட முயன்றனர். காரில் இருந்த மூவரும் இறங்கி தப்பி ஓடினர். பின் ரோடு மேம்பாலம் பணியில் ஈடுபட்ட சாத்தூர் கருப்பசாமியை 2 பேரும் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். மேலும் திருப்புடைமருதூரில் நிதி நிறுவன ஊழியர் வெங்கடேசனை அரிவாளால் வெட்டினர். தொடர்ந்து அவ்வழியாக சென்ற அரசு பஸ்சை அரிவாளால் வெட்டியும், கண்ணாடிகளை உடைத்தும் சேதப்படுத்தினர். அவர்களை பிடிக்க சென்ற ஏட்டு செந்தில்குமாரை அரிவாளால் வெட்டினர். எஸ்.பி.,சிலம்பரசன் தலைமையில் போலீசார் ரவுடிகளை தேடினர்.அன்றிரவு திருப்புடைமருதுாரில் பேச்சிதுரையின் காலில் துப்பாக்கியால் சுட்டு போலீசார் கைது செய்தனர். சந்துருவையும் கைது செய்தனர். இருவரும் காயங்களுடன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பேச்சிதுரை நேற்று காலை இறந்தார். நேற்று மதியம் உடல் பிரேத பரிசோதனை நடந்தது. மாஜிஸ்திரேட் ராஜலிங்கம் அதனை கண்காணித்தார். உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
5 hour(s) ago | 19
6 hour(s) ago | 3