மேலும் செய்திகள்
நாகர்கோவில் ரயில் இயக்கத்தில் மாற்றம்
28-Sep-2026
சேலம்: கோவை ரயில்வே சந்திப்பில் பராமரிப்பு பணி நடப்பதால் அந்த வழியே இயக்கப்படும் சில ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கேரள மாநிலம் ேஷாரனுார் சந்திப்பில், காலை, 8:20க்கு புறப்படும், ெஷாரனுார் – கோவை பயணியர் ரயில், வரும், 13, 17ல் போத்தனுார் சந்திப்பில் நிறுத்தப்படும். இது கோவை சந்திப்புக்கு வராது. அதே நாட்களில் மறுமார்க்க ரயில் மாலை, 4:38க்கு போத்தனுாரில் புறப்படும். அதே நாட்களில் மேட்டுப்பாளையத்தில் மதியம், 1:05க்கு புறப்படும், போத்தனுார் மெமு ரயில், கோவையில் நிறுத்தப்படும். போத்தனுார் வராது. மறுமார்க்க ரயில், மதியம், 3:45 மணிக்கு, கோவையில் இருந்து புறப்படும். மேட்டுப்பாளையத்தில் காலை, 10:55க்கு புறப்படும், மேட்டுப்பாளையம் – கோவை மெமு ரயில், வரும், 14, 15ல், கோவை வடக்கு ஸ்டேஷன் வரை இயக்கப்படும். அங்கிருந்து கோவை வராது. மறுமார்க்கத்தில் காலை, 11:50க்கு புறப்படும் ரயில், அதே நாட்களில் காலை, 11:57க்கு, கோவை வடக்கு ஸ்டேஷனில் புறப்படும். மாற்றுப்பாதை வரும், 13ல் இயக்கப்படும் செகந்திராபாத் – திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ், மறுநாள் கோவைக்கு பதில், இருகூர் – போத்தனுார் வழியே இயக்கப்படும். இது, 14 காலை, 9:10க்கு போத்தனுாரில் நின்று செல்லும். அதேபோல் சென்னை எழும்பூர் – மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், 14ல், மேற்கண்ட அதே தடத்தில் இயக்கப்படும். இது, 14 காலை, 9:45க்கு போத்தனுாரில் நின்று செல்லும். வரும், 12ல் இயக்கப்படும் தன்பாத் – போத்தனுார் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸூம், நாளை இயக்கப்படும், திப்ரூகர் – கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸூம், மேற்குறிப்பிட்ட இரு நாட்களில் அதே தடத்தில் இயக்கப்படும். விவேக் எக்ஸ்பிரஸ், காலை, 10:47க்கு போத்தனுாரில் நின்று செல்லும் என, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
28-Sep-2026