உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம்; வைகோ அறிவிப்பு

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம்; வைகோ அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டு உள்ளார்.இதுகுறித்து வைகோ வெளியிட்டு உள்ள அறிககையில் கூறி இருப்பதாவது;மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு மல்லை சத்யாவுக்கு கடிதம் அனுப்பி இருந்த நிலையில், அந்த கடிதத்துக்கு பதில் அறிவிப்பில் குற்றச்சாட்டுகளை அவர் மறுக்கவும் இல்லை, விளக்கமும் அளிக்கவில்லை. எனவே, மதிமுகவின் கொள்கை, குறிக்கோள், நன்மதிப்பு, ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார்.மேலும், மல்லை சத்யா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. கட்சிக்கு விரோதம் செய்ததன் அடிப்படையில் நடவடிக்கையில் ஈடுபட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட விதிகள் விதி 19, பிரிவு- 5, விதி 19, பிரிவு- 12, விதி 35, பிரிவு- 14, விதி 35 பிரிவு 15, விதி 35, பிரிவு 14- இன் படி துணை பொதுச் செயலாளர் உள்ளிட்ட கழகத்தின் அடிப்படை உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கப்படுகிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

c.mohanraj raj
செப் 09, 2025 06:44

இருப்பதே மூன்று பேர் அவர் கட்சியிலிருந்து எங்கள் எம்பி கணேசன் மூர்த்தி செத்தது தான் மிச்சம் அறிமுகப்படுத்தும் போது வருவார் பிறகு சாகும் வரை வந்ததே இல்லை


ஆசாமி
செப் 08, 2025 20:56

இன்னுமா இவர நம்பறாங்க


M Ramachandran
செப் 08, 2025 20:56

கட்சியில் யாரு தான் மீதம் இருக்கிறாங்க. உங்களையே மென்னு தின்னு துப்பிடிச்சே வேற என்ன இருக்கு.


VENKATASUBRAMANIAN
செப் 08, 2025 19:33

வைகோவை போல் சுயநலவாதி யாருமே இல்லை


Kulandai kannan
செப் 08, 2025 17:27

சமீபத்தில் முல்லை சத்யா அமெரிக்கா சென்று வந்தார். ஏது பணம்?


Thravisham
செப் 08, 2025 17:19

இந்த வைகோ மறுமலர்ச்சி கழகத்தின் சட்ட விதிகள் பஸ் ரூட் நம்பர் போல இருக்கே மல்ல இப்ப நீ ஓர் பிரீ பர்ட் நம்ம சைக்கோவின் வண்ட வாளங்களை ஊருக்கு அள்ளி விடுங்க


திண்டுக்கல் சரவணன்
செப் 08, 2025 16:24

பள்ளி மாணவனாக நான் இருந்தபோது துரோகி குற்றச்சாட்டப்பட்டு வைக்கோ திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இப்போது அதே காரணத்துக்காக வைகோ இன்னொருவரை நீக்கியுள்ளார். இது தான் வரலாறு திரும்புகிறது என்பார்கள் போல. அன்று வைகோவுக்காக பலர் உயிரை மாய்த்துக்கொண்டனர். அவர்களின் ஆன்மா வைக்கோவை கண்டிப்பாக மன்னிக்காது. இதுபோல எந்த தலைவருக்காககவும் யாரும் தங்களை வருத்திக்கொள்ளக்கூடாது என்ற பெரிய பாடத்தை அவர்கள் நமக்கு விட்டுச்சென்றுள்ளனர்


Raj
செப் 08, 2025 14:49

நான்கு பேர் கொண்ட கட்சிக்கு என்ன ஒழுங்கு நடவடிக்கை? மக்களுக்கு உதவாத தமிழக கட்சிகளில் ஒன்று. மல்லை சத்யாவுக்கு நல்ல காலம் பொறந்தாச்சு.


Murthy
செப் 08, 2025 14:37

இன்னமும் இந்த கட்சி இருக்குதா? கணக்கில் வராத பணம், நிலபுலன்களை நிர்வகிக்க கட்சி நடத்துறார் . ...


Barakat Ali
செப் 08, 2025 14:01

வாரிசுகள் முன்னேற்றக் கழகம் செய்தது சரியா ????


புதிய வீடியோ