உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேட்டைக்கு சென்றவர் குண்டு பாய்ந்து பலி; காட்டு யானை மீது பழி போட்ட 13 பேர் கைது!

வேட்டைக்கு சென்றவர் குண்டு பாய்ந்து பலி; காட்டு யானை மீது பழி போட்ட 13 பேர் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஊட்டி: நீலகிரி மாவட்டம் தேவர்சோலையில், வேட்டைக்கு சென்ற இடத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஒருவர் பலியானார். அவரை காட்டு யானை மிதித்து கொன்று விட்டதாக, நாடகம் ஆடிய 13 பேர் கைது செய்யப்பட்டனர்.நீலகிரி மாவட்டம், கூடலூர் தேவர்சோலை அருகே, கடந்த 25ல், ஜம்ஷித் என்பவர் காட்டு யானை தாக்கி இறந்ததாக, நண்பர்கள் நான்கு பேர் அரசு மருத்துவமனைக்கு உடலை கொண்டு வந்தனர். ஆனால், போலீஸ், வனத்துறையினர் விசாரணையில், யானை தாக்கியதற்கான எந்த அறிகுறியும் அந்த இடத்தில் இல்லை. இதனால் சந்தேகம் ஏற்பட்டது. கிடுக்கிப்பிடி விசாரணையில் வன விலங்கு வேட்டைக்கு சென்றபோது துப்பாக்கி தோட்டா பாய்ந்து அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.குண்டு பாய்ந்து அவர் இறந்ததை மறைக்கும் நோக்கத்தில், காட்டு யானை தாக்கி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். வாலிபர் உடலில் பாய்ந்த குண்டை, அவர்களே பிதுக்கி வெளியே எடுத்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக ஜம்ஷித்துடன் வேட்டைக்கு சென்ற நவுஷாத், ஜாபர் அலி, சதீஷ், ஐதர் அலி உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 3 நாட்டுத் துப்பாக்கி கன், 2 கார்கள் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

karupanasamy
ஜன 29, 2025 06:41

விடியல் போலீசை நம்பக்கூடாது முசுலீம் மதத்தை சேர்ந்த இவர்கள் ஆயுத பயிற்சி மேற்கொண்டதை விலங்கு வேட்டை என்று சிலிண்டர் உருட்டு பாணியில் கேஸை திசை திருப்புகிறார்கள்.


vns
ஜன 29, 2025 04:50

இத்தனை முஸ்லிம்கள் தமிழகத்திலா ?? தலை சுற்றுகிறது


Nandakumar Naidu.
ஜன 28, 2025 22:13

தற்போதைய அரசு தங்களின் சம பந்திகளை காப்பாற்றும்.


shakti
ஜன 28, 2025 21:44

அமைதி மூர்க்கம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை