அரசு பஸ் சக்கரத்தில் யாசகரை தள்ளி கொலை செய்தவர் கைது
தேனி: யாசகரை அரசு பஸ்சின் பின் சக்கரத்தில் தள்ளி கொலை செய்த போதை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.தேனி மாவட்டம், பெரியகுளம் எஸ்.பி.ஐ., காலனியை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா, 27. இவர், தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் போதையில் நின்றார். அங்கு 50 வயது மதிக்கதக்க யாசகர் வந்தார். அவரும் போதையில் இருந்தார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது தேனியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு அரசு பஸ் சென்றது.அந்த பஸ்சில் யாசகரை கார்த்திக்ராஜா தள்ளி விட்டார். கீழே விழுந்ததில் யாசகரின் தலையில் பஸ்சின் பின் சக்கரம் ஏறியதில் யாசகர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, தேனி போலீசார் கார்த்திக்ராஜாவை கைது செய்தனர்.