உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நண்பனின் தந்தையை வெட்டியவர் கைது

நண்பனின் தந்தையை வெட்டியவர் கைது

கண்டமங்கலம்: கண்டமங்கலத்தில் நண்பனின் தந்தையை கத்தியால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அம்பேத்கர் வீதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் தினகரன். இவரது நண்பர் அரியூரை சேர்ந்த தினேஷ், 20; தினேஷிற்கு குடிப்பழக்கம் இருந்ததால், அவருடன் பழக வேண்டாம் என, தந்தை கண்டித்ததால், தினகரன் நட்பை துண்டித்தார். இதனால், ஆத்திரம் அடைந்த தினேஷ், கடந்த 2ம் தேதி இரவு 9;00 மணிக்கு குடிபோதையில் தினகரன் வீட்டிற்கு சென்று, அவரது தந்தை ஜெயராமனை திட்டி, கத்தியால் வெட்டினார். படுகாயம் அடைந்த ஜெயராமன் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், தினேஷ் மீது, கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி