உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊட்டியில் வட மாநில பெண்களை வீடியோ எடுத்த நபர் கைது!

ஊட்டியில் வட மாநில பெண்களை வீடியோ எடுத்த நபர் கைது!

ஊட்டி:ஊட்டியில் வடமாநில பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி ஓட்டலில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 5 இளம்பெண்கள், உணவு பரிமாறுதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் சேர்ந்து பணியாற்றி வந்தனர். ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். நேற்று பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய இளம்பெண்கள் உடை மாற்றியுள்ளனர். அப்போது மர்மநபர் ஒருவர் மறைந்திருந்து வீடியோ எடுப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த இளம்பெண்கள் சத்தம் போட்டனர், உடனே புதுமந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில், வட மாநில இளம் பெண்கள் தங்கி இருந்த வாடகை வீட்டில் அருகில் மற்றொரு வீட்டில் வசித்து வந்த அதேபகுதியை சேர்ந்த கிரிதரன் , 35, என்பவர் வட மாநில இளம்பெண்களை வீடியோ எடுத்தது தெரியவந்தது. விசாரணையில் நாய்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களாக கிரிதரன் தனது வீட்டிற்கு செல்லும்போது, ஜன்னல், கதவு வழியாக இளம் பெண்களை நோட்டமிட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் கிரிதரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி