உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சென்னையில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சென்னை: சென்னையில் தொழில் நிறுவன உரிமையாளர் மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்டையார்பேட்டையில் உள்ள கும்மாளம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் தொழில் நிறுவன உரிமையாளர் மகன் பிரகலாத் நரசிம்மன். 32 வயதான இவர், இன்று வீட்டில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பிரகலாத்தின் இந்த முடிவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

V Venkatachalam
மே 27, 2025 21:17

திருட்டு தீய முக எவனாவது அவர் சொத்தை ஆட்டைய போட மிரட்டுனாரா– ன்னு சந்தேகமா இருக்கு.


Ramesh Sargam
மே 27, 2025 20:07

சென்னையில் கூட அந்த வேண்டத்தகாத துப்பாக்கி கலாச்சாரம் தலையெடுக்க ஆரம்பித்துவிட்டது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. வேதனை தருகிறது. காவல்துறையினர் இதற்கு ஒரு முடிவு உடனே காணவேண்டும். இல்லையென்றால் அமெரிக்கா நிலைமைதான். ஜாக்கிரதை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை