உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாஞ்சோலை அரசு பள்ளி பெண் தலைமையாசிரியரை ஏற்றாமல் சென்றதால் தவிப்பு

மாஞ்சோலை அரசு பள்ளி பெண் தலைமையாசிரியரை ஏற்றாமல் சென்றதால் தவிப்பு

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மலையில் உள்ள மாஞ்சோலை எஸ்டேட்டில டிச.17, 18 கனமழையால் மலைவழி சாலை பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு அரசு பஸ்கள் செல்ல முடியவில்லை. தற்போது ஆர்டிஓ கண்காணிப்பில் வனத்துறை வேன் ஒன்று இயக்கப்படுகிறது. இந்த வேனில் மணிமுத்தாறு முதல் ஊத்து வரையில் இயக்கப்படுகிறது. அதிகபட்சம் 22 பயணிகள் தான் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று மாலையில் புறப்பட்ட வேனில், ஊத்து மற்றும் நாலுமுக்கில் உள்ள மக்கள் அனைவரும் ஏறியதால் வேன் நிரம்பியது. மாஞ்சோலைக்கு வேன் வந்தபோது, அங்கு காத்திருந்த அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் 58 வயதான தலைமையாசிரியை வேனில் ஏற முயன்றார். ஆனால் வேனிலிருந்த பொதுமக்கள் வேன் நிரம்பிவிட்டதாக கூறி, பெண் தலைமையாசிரியரை கீழே இறக்கி விட்டனர். அந்த பகுதியில் வேறு வாகனங்கள் இல்லாத நிலையில், பல மணி நேரம் தலைமையாசிரியர் காத்திருந்தார். வேனில் கிராமநிர்வாக அலுவலர் தங்ககுமார், தலையாரி அகிலா ஆகியோரும் இருந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்