உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல்; டெண்டர் எடுக்க பல நிறுவனங்கள் போட்டி

3 கோடி ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல்; டெண்டர் எடுக்க பல நிறுவனங்கள் போட்டி

சென்னை : தமிழகம் முழுதும் வீடு உள்ளிட்ட மின் இணைப்புகளில், 3.04 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தும் பணிக்கு, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, மின் வாரியம் வெளியிட்ட டெண்டரில், 42 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. தமிழகத்தில் தாழ்வழுத்த பிரிவில் உள்ள, அனைத்து மின் இணைப்புகளிலும், ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும், 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தை, மின் வாரியம் செயல்படுத்த உள்ளது. 'டெண்டர்' இதற்காக, ஆறு தொகுப்புகளாக, 3 கோடி மின் இணைப்புகளிலும், 4.94 லட்சம் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களிலும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி, அதை பராமரிக்கும் நிறுவனத்தை தேர்வு செய்ய, கடந்த மார்ச்சில், 'டெண்டர்' கோரப்பட்டது. அதாவது, மின் வாரியத்தின், 12 மண்டலங்களில், தலா இரு மண்டலங்களுக்கு ஒரு தொகுப்பு என, ஆறு தொகுப்புகளாக 'ஸ்மார்ட் மீட்டர்' கொள்முதலுக்கு, டெண்டர் கோரப்பட்டது. சென்னை, வேலுார் மண்டலங்களுக்கு, 49.34 லட்சம்; காஞ்சிபுரம், விழுப்புரம், 49.61 லட்சம்; கோவை, ஈரோடு, 56.47 லட்சம்; மதுரை, திருவண்ணாமலை, 49.77 லட்சம்; கரூர், திருநெல்வேலி, 49.98 லட்சம்; திருச்சி, தஞ்சைக்கு, 49.67 லட்சம் மீட்டர்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இவற்றில் 2.50 கோடி ஒரு முனை மீட்டர், 49.47 லட்சம் மும்முனை பிரிவு மீட்டர். திட்ட செலவு, 20,000 கோடி ரூபாய். ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டரில் பங்கேற்க, இம்மாதம், 5ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. நேற்று மதியம், 2:30க்கு டெண்டர் புள்ளி திறக்கப்பட்டது.

விலைப்புள்ளி இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்துவதற்கான டெண்டரில், அதிக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. ஐந்து தொகுப்புகளுக்கு தலா ஆறு நிறுவனங்களும், ஒரு தொகுப்புக்கு, 12 நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. இவற்றின் தொழில்நுட்ப விபரம் விரைவில் சரிபார்க்கப்பட்டு, அதில் தேர்வாவோரின் விலைப்புள்ளி திறக்கப்படும். இம்மாத இறுதிக்குள் ஆணை வழங்கப்பட்டு, செப்., இரண்டாவது வாரத்தில் இருந்து, 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தும் பணிகளை துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

V RAMASWAMY
ஆக 06, 2025 13:17

வாவ், இன்னுமொரு ல திட்டம்.


கத்தரிக்காய் வியாபாரி
ஆக 06, 2025 12:23

தீய ஊழல் செய்ய கடைசி சில சந்தர்ப்பங்கள்


Jack
ஆக 06, 2025 07:41

திருச்சியில் simco மீட்டர் நிறுவனம் மிக பிரபலம் . இந்த டெண்டரில் வடக்கன்ஸ் ஆதிக்கம் தான் இருக்கும் .


தியாகு
ஆக 06, 2025 07:32

அடேங்கப்பா, ஒரு மீட்டருக்கு ஆயிரம் ரூபாய் கமிஷன் என்றாலும் மூவாயிரம் கோடிகளை கட்டுமர திருட்டு திமுக அசால்ட்டாக ஆட்டையை போடுமே தலைமை குடும்பத்திற்கு ஐநூறு கோடிகள் பார்சல்.............


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை