உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மார்ச்-17: பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்

மார்ச்-17: பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 17) பெட்ரோல் ஒரு லிட்டர் 100.75 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 92.34 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. தமிழகத்தில், 2021 நவ.,3ல் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 102.59 ரூபாய்க்கு விற்பனையாகின. இதுவே, பெட்ரோல், டீசல் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது.இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு மே-21-ம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார் அதனை தொடர்ந்து சென்னையில் பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் 663 நாட்களுக்கு பிறகு சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 1.88 குறைந்து ரூ.100.75க்கும் டீசல் லிட்டருக்கு ரூ.1.90 குறைந்து 92.34க்கும் விற்பனையானது. இன்று(மார்ச்-17) பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75க்கும் டீசல் 92.34க்கும் விற்பனையாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Oviya Vijay
மார் 17, 2024 08:21

உலக சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் தான் விலையை நிர்ணயிக்கின்றன... இதற்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிய நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்த போதிலும் இந்தியாவில் 663 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல் மத்திய அரசு மக்களை ஏமாற்றி இதுவரை கொள்ளை அடித்த லட்சக்கணக்கான கோடிகள் எங்கே என்று கேட்டால் பிஜேபி எவரிடத்திலும் பதில் இருக்கப் போவதில்லை...


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி