மேலும் செய்திகள்
மார்கழி வழிபாடு
20-Dec-2025
மார்கழி வழிபாடு: திருப்பாவை,திருவெம்பாவை-பாடல் 8
22-Dec-2025
திருப்பாவை - பாடல் 10நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்பொருள்: முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக்கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை துாக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் துாக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா.திருவெம்பாவை - பாடல் 10பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவேபேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்கோதில் குலத்தரன் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்ஏதவனுார் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்பொருள்: தீயபண்புகள் இல்லாத குலத்தில் உதித்தவர்களும், கோயில் திருப் பணியையே சொந்தமாக்கிக் கொண்டவர்களுமான பெண்களே! நம் தலைவனாகிய சிவபெருமானின் சொல்வதற்கரிய பெருமையுடைய திருப்பாதங்கள் ஏழு பாதாள லோகங்களையும் கடந்து கீழே இருக்கிறது. பல்வேறு மலர்களை அணியும் திருமுடியானது வானத்தின் எல்லைகளைக் கடந்து எல்லாப் பொருட்களுக்கும் எல்லையாக இருக்கிறது. சக்தியை மேனியில் ஒரு பாகமாகக் கொண்டதால் அவன் ஒருவனல்ல என்பது நிஜமாகிறது. வேதங்களும், விண்ணவரும், பூலோகத்தினரும் ஒன்று சேர்ந்து துதித்தாலும் அவன் புகழைப் பாடி முடிக்க முடியாது. யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் அவன் நண்பன். ஏராளமான பக்தர்களைப் பெற்றவன். அவனுக்கு ஊர் எது? அவனது பெயர் என்ன? யார் அவனது உறவினர்கள்? யார் அவனது பக்கத்து வீட்டுக்காரர்கள்? எந்தப் பொருளால் அவனைப் பாடி முடிக்க முடியும்? சொல்லத் தெரியவில்லையே!.
20-Dec-2025
22-Dec-2025