உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொடிக்கம்பங்கள் அகற்றம் எதிராக மார்க்சிஸ்ட் வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி

கொடிக்கம்பங்கள் அகற்றம் எதிராக மார்க்சிஸ்ட் வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கொடிக் கம்பங்களை அகற்றும் அரசின் நடவடிக்கைக்கு தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.மதுரை அ.தி.மு.க., நிர்வாகி கதிரவன்,'பழங்காநத்தம் பைபாஸ் ரோடு ஜெயம் தியேட்டர் எதிரே பஸ் ஸ்டாப் உள்ளது. அங்கு அ.தி.மு.க.,கொடிக் கம்பம் நட அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்,' என மனு தாக்கல் செய்தார். இதுபோல் மேலும் சில மனுக்கள் தாக்கலாகின. ஜன., 27 ல் நீதிபதி ஜி.கே.இளந்திரையன், 'அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுகிறது. தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசின் இதர துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும்,' என உத்தரவிட்டார்.இதை எதிர்த்து அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் நிறுவனர் அம்மாவாசிதேவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதை மார்ச் 6 ல் இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது.இதை மறு சீராய்வு செய்ய மனு தாக்கல் செய்ய அனுமதிக்க மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் மனு தாக்கல் செய்தார். தனி நீதிபதியின் உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இரு மனுக்களும் நிலுவையில் உள்ளன.சண்முகம்,'மதுரை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் மார்க்சிஸ்ட் கொடிக் கம்பங்களை அகற்றும் அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்,' என மற்றொரு மனு செய்தார். நீதிபதி சி.சரவணன் தள்ளுபடி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Bhaskaran
ஜூன் 22, 2025 21:34

உண்டியல் குலுக்கி பயலுகளை உதைக்க வேண்டும்


S Bala
ஜூன் 21, 2025 14:15

தேசிய மற்றும் நெடுஞ்சாலை மட்டுமல்லாது நகரங்களுக்குள்லேயும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். முதலில் கொடி அப்புறம் படிப்பகம் அப்புறம் கிளை அலுவலகம், இப்படி ஒவ்வொரு தெரு முனையும் ஆக்கிரமிக்கப்படுகிறது. அத்தோடு ஒரு அரசிய தலைவன் விடாமல் அனைத்து பொறுக்கிகளுக்கும் பிறந்தநாள், செத்த நாள் எல்லாம் கொண்டாடுவதும் இந்த கொடிக்கம்பங்கள் நடப்பட்ட தெரு முனைகளில்தான்.


தமிழ்வேள்
ஜூன் 21, 2025 14:11

ஒவ்வொரு மனுவுக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் ஃபைன் போட்டு அதை ராணுவத்தினர் நல நிதிக்கு அனுப்ப சொல்லி னு டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும்... அபராதம் இல்லை என்றால் அடங்கமாட்டான்கள்


Kulandai kannan
ஜூன் 21, 2025 12:24

ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகர் சாலையில் திடீரென திமுக கொடிக் கம்பம் முளைத்திருக்கிறது.


V Venkatachalam
ஜூன் 21, 2025 13:08

அது ஆதம்பாக்கம் இல்லே. ஆதவன் பாக்கம். அதாவது எங்க ஏரியா. எங்க ஏரியா எங்க கொடி.. எவனாவது எங்களை கேக்க முடியுமா? அது போகட்டும். ஆதம்பாக்கம் ஏரி இன்னும் சில வருஷங்கள் கழித்து குட்டை மாதிரி ஆயிடும். அத யாராவது கேளுங்கோ.ஓரு தலைமுறைய காப்பாத்துன புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்.


visu
ஜூன் 21, 2025 13:57

அது உங்க சொந்த இடமா இருந்தால் தவிர பிடுங்கி எறியப்பட வேண்டும் கொஞ்சம் பொறுங்க


கண்ணன்
ஜூன் 21, 2025 12:20

இந்த கம்யூகட்சிகளையே அகற்ற கோர்ட் உத்தரவிடலாம்!


theruvasagan
ஜூன் 21, 2025 09:56

பொது இடத்தை ஆக்கிரமித்ததும் இல்லாமல் அதை சொந்தம் கொண்டாட உரிமை கோருவது அயோக்கியத்தனம். தள்ளுபடியுடன் அபராதம் சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே கொடுக்கப்பட வேண்டும்.


Venu kopaal, S
ஜூன் 21, 2025 09:42

இவனுங்களுக்கு உண்டி குலுக்கி, கொடி மரம், பெட்டி வாங்குவது, நன்றாக இயங்கும் ஆலைகளை மூடுவது இதைதவிர வேற எதுவும் தெரியாது. விட்டா மாத சார்பின்மை, soshalisam பொது உடமை அப்டின்னு ஊசி போன சரக்க எடுத்து விடுவார்கள். கேவலம் உண்ட நாட்டுக்கு துரோகம் செய்யும் பிறவிகள்.


சின்னசேலம் சிங்காரம்
ஜூன் 21, 2025 09:23

பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கொடிக்கம்பம் அமைப்பதே தவறு. இதில் நீதிமன்றத்தில் வழக்கு வேறு போடுவார்களாம். நியாயமாக தள்ளுபடி செய்ததுடன் கடும் அபராதம் விதித்திருக்க வேண்டும்


Lion Drsekar
ஜூன் 21, 2025 09:22

இந்த கொடிக்கம்பங்களை ஏழை விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுத்தால் அவர்கள் அவரை போன்ற கொடிக்காய்களை பயிரிடுவார்கள் , அதே போல் இவர்கள் காட்டும் கொடிகளை, நல்ல துணியாக வாங்கி ஏழைகளின் குழந்தைகளுக்கு உடுக்க உடை தைத்துக்கொடுக்கலாமே , வந்தே மாதரம்


நடராஜன்,நெல்லை
ஜூன் 21, 2025 09:56

ரொம்ப நாளா உன் தொல்லை இல்லாமல் இருந்தது இப்ப வந்துட்டியா திரும்ப தொல்லை ஆரம்பிச்சிருச்சு. வந்தேமாதரம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை